கிங்டம் திரைப்பட வசூல்
விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பாக்யஶ்ரீ போர்ஸ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள கிங்டம் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் விஜய தேவரகொண்டா ரசிகர்களிடம் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கிங்டம் படத்தின் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரூ 130 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ள கிங்டம் முதல் நாளில் உலகளவில் ரூ 39 கோடி வசூலித்துள்ளது. வேலை நாளில் வெளியானபோதும் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது விஜய் தேவரகொண்டாவின் வளர்ச்சியையே காட்டுகிறது.
வாரிசு நடிகர்களுக்கே சவால்விடும் விஜய் தேவரகொண்டா
வளர்ந்து வரும் நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழ் மட்டும் தெலுங்கில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. டியர் காம்ரேட் , அர்ஜூன் ரெட்டி , கீதா கோவிந்தம் ஆகிய படங்கள் அவருக்கு பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. விஜய் தேவரகொண்டா நடித்து அண்மையில் வெளியான குஷி மற்றும் ஃபேமிலி ஸ்டார் ஆகிய இரு படங்கள் பெரியளவில் வெற்றிபெறவில்லை. இப்படியான நிலையில் கிங்டம் படத்தின் மீது ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்ப்பு வைத்திருந்தார்கள். ரிலீஸூக்கு முன்பிருந்தே படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இருந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸில் இந்த ஆண்டின் டாப் படங்களில் கிங்டம் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஆண்டு ராம் சரண் நடித்து தெலுங்கில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் ரூ 54 கோடி வசூலித்து வசூலில் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பவன் கல்யாண் நடித்து சமீபத்தில் வெளியான ஹரிஹர வீர மல்லு திரைப்படம் ரூ 47. 5கோடி வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிகம் வசூலித்த டாப் 5 படங்களில் கிங்டம் திரைப்படம் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கலாம். எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் தனக்கென இத்தனை பெரிய ரசிகர்கள் கூட்டமும் மார்கெட்டையும் விஜய் தேவரகொண்டா உருவாக்கியுள்ளார்