தர்மா தயாரிப்பில் வெளியாகவிருக்கும்  லிகர் (Liger) படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.


இப்படத்தை பற்றிய தகவல் தெரிந்த முதல் நாளிலிருந்து, சினிமா ரசிகர்கள் லிகர் படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். “ஐ ஸ்மார்ட் சங்கர்”,  “போக்கிரி” ஆகிய மாஸ் படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத், லிகர் படத்தின் இயக்குநர் ஆவார். லாக்டவுன் காரணமாக இப்படம் ஒத்திவைக்கப்பட்ட  நிலையில் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


இன்று வெளியான ட்ரைலர் காட்சிகளில், விஜய் தேவரகொண்டா, பேச்சு குறைபாடுள்ளவர் மற்றும் பல கேங்க்ஸ்டர் சண்டைகளில் சிக்கி வரும் ஒரு கிக்பாக்ஸராக காண்பிக்கப்படுகிறார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இவரது ஜோடியாகவும், நடிகை ரம்யா கிருஷ்ணன் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாகவும் நடித்துள்ளனர்.


லிகர் படத்தின் ஹைலைட்டே, மைக் டைசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதுதான்.மைக் டைசன் இதற்கு முன்பாக, ஹாங் ஹோவர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தின் கதைகளமானது, விஜய் தேவர்கொண்டா ஒரு டீ கடை வியாபாரியாக இருந்து, இந்தியன் பாக்ஸராக MMA பட்டத்தை எப்படி வென்று காட்டுகிறார் என்பதை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.


இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு,  பட குழுவினராகிய விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே,  கரண் ஜோகர், பூரி ஜெகன்நாத் ஆகியோர்  ஹதராபாத் நகரத்திற்கு வந்தனர்.


 






இதனையடுத்து, படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டா பக்கதில் "இந்தியா, உங்களுக்கு மாஸ் ஆக்‌ஷன் பொழுதுபோக்கை தருகிறோம். அது லிகர் படத்தின்  ட்ரைலர் ஆகும்.” என பதிவு செய்துள்ளார். கடந்த மாதம் அக்டி பக்டி பால் வெளியானது, இப்பாடலில் கதாநாயகிக்கும், கதாநாயகனுக்குமான காதல் கதை அழகாக காட்சி படுத்தப்பட்டுள்ளது.


 


Also read : Vijay Devarakonda | விஜய் தேவரகொண்டாவும், மைக் டைசனும் இருக்கும் ஃபோட்டோ பாத்தீங்களா? சீக்ரெட் இதுதான்!