தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேனிசைத் தென்றல் தேவா இன்று (அக்டோபர் 17) காலமானார். 75 வயதான தேவா, சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் கானா பாடல்களைப் பிரபலப்படுத்தியதிலும், பல வெற்றிப் பாடல்களை வழங்கியதிலும் முக்கியப் பங்கு வகித்த தேவா, நடிகர் விஜய் பாடகராக அறிமுகமானதிலும் முக்கியப் பங்கு வகித்தவர்.

Continues below advertisement

விஜய்யை முதன்முதலில் பாட வைத்த தேவா

நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும் நடிகர் விஜய் ரசிகர்களை கவர்ந்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் , ஏ ஆர் ரஹ்மான் , அனிருத் , யுவன் ஷங்கர் ராஜா என பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் விஜய் பாடியிருந்தாலும் ஒரு பாடகராக அவர் அறிமுகமானதும் தேவாவின் இசையில்தான். இதுமட்டுமில்லாமல் விஜய் அதிகம் பாடல்களை பாடியதும் தேவாவின் இசையில் என்பது குறிப்பிடத்தக்கது.  

1994ஆம் ஆண்டு வெளியான 'ரசிகன்' படத்தில் இடம்பெற்ற 'பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி' பாடலின் மூலம் விஜய் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இந்தப் பாடலைப் பாடகி கே.எஸ். சித்ராவுடன் இணைந்து விஜய் பாடியிருந்தார். தேவாவின் துள்ளலான இசையும் விஜய்யின் உற்சாகமான குரலும் இணைந்த இந்தப் பாடல், அவரது பாடகர் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.

Continues below advertisement

தேவா இசையில் விஜய் பாடிய பாடல்கள்

'ரசிகன்' படத்தைத் தொடர்ந்து தேவா இசையமைத்த பல திரைப்படங்களில் விஜய் பாடினார். 1990களில் வெளியான விஜய்யின் ஆரம்பகாலப் படங்களில் தேவா இசையமைத்த பாடல்கள் முக்கிய இடம்பிடித்தன.

  • ரசிகன் (1994):பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி
  • தேவா (1995):அய்யய்யோ அலமேலு, கோத்தகிரி குப்பம்மா, ஒரு கடிதம்
  • விஷ்ணு (1995):தொட்டபெட்டா ரோட்டு மேலே
  • மாண்புமிகு மாணவன் (1996): திருப்பதி போனா மொட்டை
  • காலமெல்லாம் காத்திருப்பேன் (1997): அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
  • ஒன்ஸ்மோர் (1997): ஊர்மிளா ஊர்மிளா
  • பிரியமுடன் (1998): மௌரியா மௌரியா
  • நினைத்தேன் வந்தாய் (1998): மனிஷா மனிஷா
  • நெஞ்சினிலே (1999): தங்க நிறத்துக்கு

இந்தப் பாடல்களில் 'அய்யய்யோ அலமேலு', 'கோத்தகிரி குப்பம்மா', 'தொட்டபெட்டா ரோட்டு மேலே' உள்ளிட்ட பாடல்கள் விஜய்யின் ஆரம்பகாலப் பாடல்களாக ரசிகர்களிடம் அறிமுகமானவை. 'தொட்டபெட்டா ரோட்டு மேலே' பாடலில் விஜய் தனது தாயார் ஷோபா சந்திரசேகருடன் இணைந்து பாடியிருந்தார்.

விஜய் குறித்து தேவா 

விஜய்யின் பாடும் திறன் குறித்து நேர்காணல் ஒன்றில் தேவா பேசியிருப்பார். " விஜய் பின்னணி பாடகர்களுக்கு நிகரான ஒரு பாடகர்தான். அவர் பாடினால் அதில் ஒரு ப்ரோஃபஷ்னல் சிங்கருக்கு ஏற்ற ஸ்ருதி இருக்கும். விஜய்யின் குரலில் இருந்த தனித்துவம் கானா பாடல்களுக்கு ஏற்றதாக இருந்தது " என தேவா விஜய் குறித்து கூறியுள்ளார்.