Leo Vijay Name: லியோ படத்தில் விஜயின் பெயர் இதுதானா? லோகேஷ் கனகராஜ் கொடுத்த சர்ப்ரைஸ்..!

லியோ படத்தில் விஜய் நடிக்கும் கதாபாத்திரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் நடிக்கும் கதாபாத்திரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

அதிரும் இணையதளம்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. விஜயின் பிறந்தநாளையொட்டி,  இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையமைப்பில் விஷ்ணு எடாவன் எழுதியுள்ள இந்த பாடலை, விஜய் பாடியுள்ளார்.  நா ரெடி தான் வரவா, எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா எனும் வகையில் இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. பாடல் முழுவதும் தரை லோக்கலாக பாடியுள்ள விஜய், தனது கதாபாத்திரத்தம் இந்த படத்தில் எப்படி இருக்கும் என்பதையே இந்த பாடல் வரிகள் மூலம் உணர்த்தியுள்ளார். அதோடு இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதில் ஒன்றின் பெயர் லியோ -ஆக தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேநேரம், மற்றொரு கதாபாத்திரத்தின் பெயரை படக்குழு சூசகமாக கூறியுள்ளது.

விஜய் கதாபாத்திரத்தின் பெயர்:

இந்த பாடலின் ஒரு சீனில் விஜய் நடந்து வரும்போது, அவரது பின்புறமாக ஒரு நிறுவனத்தின் பெயர் பலகை உள்ளது. அதில் தாஸ் & கோ என பெயர் எழுதப்பட்டுள்ளது. அந்த சாம்ராஜ்ஜியத்திற்கே விஜய் தான் தலைமை என கருதப்படும் நிலையில், அவரது நிறுறுவனத்திற்கும் விஜயின் பெயர் தான் சூட்டப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், லியோ படத்தில் விஜய் லியோ மற்றும் தாஸ் எனும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

”திருமலை” விஜய்:

இந்த பாடலில் விஜயின் உடை அலங்காரத்தை பார்த்த உடன் அனைவருக்கும் நினைவில் வருவது நிச்சயம் திருமலை படம் தான். விஜயை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய திரைப்படம் எனும் பெருமை திருமலை படத்தையே சேரும். அந்த படத்தில் இடம்பெற்ற ஓபன் ஷர்ட் ஸ்டைலை தான் இந்த படத்திலும் விஜய் பின்பற்றியுள்ளார். பாடலின் பெரும்பாலான பகுதிகளில் விஜய் புகைபிடித்தவாறு தான் நடனமாடியுள்ளார். இதே ஸ்டைலை தான் கில்லி படத்திலும் செய்து விஜய் அசத்தியிருந்தார். மதுரையில் முத்துப்பாண்டியையே அடித்து விட்டு, தனலட்சுமியுடன் அங்கிருந்து வெளியேறும் விஜய், வாயின் ஓரத்தில் சிகரெட்டை வைத்து இருக்கும் காட்சியை தான் இந்த பாடலும் நினைவூட்டுகிறது. அதோடு, மில்லி உள்ள போன கில்லி வெளிய வரும் என்ற வரியும் பாடலில் இடம்பெற்றுள்ளது.

மாஸ்டர் ரெஃப்ரன்ஸ்:

விஜய் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் ஒத்து பாடல் பெரிய ஹிட் அடித்தது. அதே பாணியில் தான், நா ரெடி தான் பாடலும் விஜயை வரவேற்பது போன்ற வோகல்ஸ் இடம்பெற்றுள்ளன. வாத்தி கம்மிங் ஒத்து பாடலில் விஜய் ஷோபாவில் இருந்து எழுந்து சோம்பல் முறிக்கும் காட்சி, அப்படியே அனிமேஷனாக இந்த பாடலில் காட்டப்பட்டுள்ளது. அதே காப்பையும் விஜய் அணிந்துள்ளார். 

லியோ - ரோலக்ஸ் மோதல்:

விக்ரம் படத்தின் இறுதியில் காட்டப்பட்ட சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் கழுத்தில் தேள் படம் இடம்பெற்று இருக்கும். இந்நிலையில், நா ரெடி தான் பாடலில் ”தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா” எனும் வரி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யூனிவர்சில் லியோ மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரங்கள் மோதிக்கொள்வது உறுதி என ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். இதோடு, லோகேஷ் கனகராஜின் டிரேட் மார்க்கான, பிரியாணியும் இந்த பாடலில் தவறாமல் இடம்பெற்றுள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola