நடிகர் விஜய் தற்போது, கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்ததால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.


பீஸ்ட் படத்துக்கு பிறகு விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற ஆவல் அவரது ரசிகர்களிடையே எழுந்தது. விஜய்யிடம்  பாண்டிராஜ், சுதா கொங்கரா, வெற்றிமாறன் போன்றோர் கதை சொல்லியிருப்பதாகவும் இவர்களில் யாராவது ஒருவரது இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்ற தகவலும் வெளியானது.


ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக தெலுங்கில் முன்னணி இயக்குநராக இருக்கும் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியானது. வம்சி சமீபத்தில் இயக்கிய மகரிஷி படம் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் வம்சி பெரும் ஹிட்டாக்குவார் என விஜய்யின் ரசிகர்களும், இயக்குநர் வம்சியின் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.


படத்தின் கதை வேலைகள் முடிவடைந்திருக்கும் சூழலில் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கிறது. தில்ராஜு தயாரிக்க இருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பார் எனவும் முக்கிய கதாபாத்திரங்களில் மகேஷ் பாபுவின் மகள் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கும் நடிகர்களின் தேர்வு விரைவில் தொடங்கவிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.




இந்நிலையில் இயக்குநர் வம்சி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய மிகப்பெரிய பலமே மனித உறவுகளும், உணர்வுகளும்தான். எனவே விஜய்யை வைத்து நான் இயக்கும் படத்தில் இந்த இரண்டு விஷயங்களும் நிச்சயம் இருக்கும். விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தையும் அவரது ரசிகர்களையும் மனதில் கொண்டு நான் இந்தக் கதையை எழுதியிருக்கிறேன்.


 






படம் குறித்த அப்டேட் டிசம்பர் மாதம் முதல் வெளிவரும். படத்தின் கதையையும் எழுதி முடித்துவிட்டோம். தற்போது என் கவனம் முழுக்க விஜய் 66 படத்தின் மீதுதான் இருக்கிறது. எனது திரையுலக வாழ்க்கையில் இப்படம் நிச்சயம் பெரிய படமாக இருக்கும்.




விஜய் தமிழ் சினிமாவின் மிக உயரிய இடத்துக்குச் சென்றுவிட்டாலும் அவருடைய பணிவு மாறவில்லை. அவரைப் பொறுத்தவரை இயக்குநருடன் எந்தவித சங்கடமும் இல்லாமல் இருப்பதே ஒரு படத்தைத் தொடங்குவதற்கான முக்கிய அளவுகோல். நாம் எதிர்பார்க்கவே முடியாத அளவுக்கு விஜய் எளிமையானவர்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண