ஜனவரி 13 ஆம் தேதி அஜித் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் கொண்டாட்டம் இப்போது இருந்தே தொடங்கிவிட்டது. படத்தின் பல சுவாரஸ்ய விஷயங்கள் இணையத்தில் கசிய தொடங்கியுள்ளது. சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குநர் ஹச்.வினோத் படம் குறித்த பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.
ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாத இப்படத்தில், ஹிட்லரால் உருவாக்கப்பட்ட ரானுவ படையில் ,பயிற்சி பெற்ற பைக் ரேஸர்களை அழிப்பார் அஜித் என கூறப்படுகிறது. முன்னதாக படத்தின் கதை மற்றும் ஹூமா குரோஸி ரோல் குறித்த பல செய்திகளை பார்த்தோம். . புத்தாண்டை முன்னிட்டு வலிமை படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது. முன்னதாக படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் விசில் தீம் வெளியாகி இணையத்தை கலக்கின.
இதில் நாங்க வேற மாறி மற்றும் அம்மா பாடல் ஆகிய இரண்டையும் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். விக்னேஷ் சிவன் இயக்குநராக மட்டுமல்லாமல் , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவாராக இருப்பவர். அஜித் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பிற்காக பல பாடலாசிரியர்கள் காத்திருக்கும் சூழலில், விக்னேஷ் சிவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் தான் எழுதிய இரண்டு பாடலுக்குமே விக்னேஷ் சிவன் சம்பளமாக எதுவும் வாங்கவில்லையாம் . இந்த தகவலை தற்போது இயக்குநர் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் சூழலில் ,பின்னணி இசைக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் உதவியதாக கூறப்படுகிறது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் என தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. சரியாக 2 மணி 58 நிமிடம் 35 விநாடிகள் படம் ஓடும் நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பரபரவென திரைக்கதை இருந்தால் மட்டுமே 3 மணி நேரம் என்பது பார்வையாளர்களுக்கு உறுத்தலை தராது என்றும், ஏதேனும் சிறு சொதப்பால் என்றாலும் படத்தின் நீளம் தொய்வை கொடுத்துவிடும் என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.