துபாயில் பிரபல புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் முன் முன்னதாக தன் காதல் மனைவி நயன்தாராவின் அன்பில் திளைத்தபடி இயக்குநர் விக்னேஷ் சிவன் முன்னதாக காதல் ததும்பக் கொண்டாடினார்.
தன் 37ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவனின் முன்னதாக இணையத்தில் பகிர்ந்த நிலையில் நெட்டிசன்களின் மத்தியில் வைரலாகி லைக்ஸ் அள்ளின. தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா, தன் அம்மா, குடும்பத்தினர், நண்பர்கள் சூழ துபாயில் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
”இது உன்னுடனான என் 8வது பிறந்தநாள் தங்கமே. என் ஒவ்வொரு பிறந்தநாளையும் முந்தைய பிறந்தநாளைக் காட்டிலும் கூடுதல் சிறப்பானதாக நீ மாற்றியுள்ளாய். ஆனாலும் இந்த பிறந்தநாள் மிகவும் உணர்ச்சிகரமானது. இப்படிப்பட்ட காதலியாக நீ இருப்பதற்கு நன்றி!
என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்வது எது எனத் தெரிந்து வைத்து அதை நீ எனக்குக் கொடுத்திருக்கிறாய். லவ் யூ” என்றும் இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் ட்ரெண்டாகி வருகிறது.