அஜித் குமார் நடிப்பில் , ஹெச்.வினோத் இயக்கத்தில் , போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தில் ஃபஸ்ட்லுக் , டீஸர் வீடியோக்கள், முதல் சிங்கிள் வெளியாகி இணையத்தை கலக்கின. இந்த நிலையில் நேற்று படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. அம்மா பாடல் என தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த பாடல் குறித்த ஹிண்டை முன்னதாக படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் கொடுத்திருந்தார். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகியுள்ளது. குறிப்பாக யூடியூப் பக்கத்தில் 2,451,955 பார்வையாளர்களை கடந்துள்ளது.




 ‘நான் பார்த்த முதல் முகம் நீ’  என தொடங்கும் இந்தப் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.  யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாக உள்ள இந்தப் பாடலின் ப்ரோமோ முன்பே வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாடலை எழுதிய விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்த நெகிழ்சியான பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “ இந்த பாடலை நான்  ஓய்வுப்பெற்ற இன்ஸ்பெக்டர் மீனாகுமாரிக்கு ...என் அம்மாவுக்கு  சமர்ப்பிக்கிறேன்.. எப்போதுமே எனக்கு அம்மாவுக்காக ஒரு பாடல் எழுத வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இதன் மூலமாக நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் ! “ என கூறி இசையமைப்பாளர் யுவன் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். 






 



முன்னதாக விக்னேஷ் சிவன் தனது காதலி நயன் தாராவிற்காக “தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே! “. “கண்ணான கண்ணே நீ கலங்காதடி “ உள்ளிட்ட பாடலை நானும் ரௌடித்தான் படத்திற்காக எழுதியிருந்தார். அந்த படத்தில் ராதிகா ஏற்று நடித்த கதாபாத்திரம் விக்னேஷ் சிவனின் தயார் மீனாகுமாரியின் நிஜ வாழ்க்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவன் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தை இயக்கியுள்ளார். படம் வருகிற பிப்ரவரி மாதம் , காதலர் தினைத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.