இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் அங்கு தாங்கள் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்கி முடித்த விக்னேஷ் சிவன் மனைவி நயன்தாராவை அழைத்துக்கொண்டு ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
விமானத்தில் நயனை முத்தமிட்டு பயணத்தை தொடங்கிய விக்னேஷ் சிவன் அங்கு தாங்கள் சென்ற சுற்றுலா தளங்கள், ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போதும் பல புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
சமீப காலமாக தென்னிந்திய சினிமா பற்றின தலைப்புச்செய்திகளில் நிச்சயமாக இடம்பெறும் ஒரு ஜோடி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன். அவர்கள் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ். பல வருடங்கள் காதலர்களாக இருந்த இந்த காதல் ஜோடியின் திருமண ஜூன் 9-ஆம் மிக மிக பிரமாண்டமாய் அரங்கேறியது.
இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பரஸ்பர அன்பு காதல்தான் அதற்கு காரணம். இருவரும் "மேட் ஃபார் இச் அதர்" என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இவர்கள் இருவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் செய்யும் போஸ்ட், வீடியோ, செய்திகளுக்காக அவர்களின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். அதனாலேயே இந்த ஜோடி அடிக்கடி தங்களது அன்பான புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்து புயல் வேகத்தில் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்குவர். அந்த வகையில் தான் தற்போதும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் அவர்களிடம் இருந்து மேலும் புகைப்படங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.. வெயிட்டிங்ஸ்..
விக்னேஷ் சிவன் தனது காதலியின் மீது உள்ள அன்பை வெளியிடுவதில் ஒரு போதும் தவறுவதில்லை. இதற்கு சாட்சியாக இருக்கிறது அவர்களின் சமூக ஊடக பதிவுகள். அவர்களின் காதல் கதை ஒரு டாக்குமெண்டரியாக நெட்ஃபிக்ஸ் உருவாக்கிவருகிறது. அதற்கு "பியோண்ட் தி ஃபேரிடேல்" என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் டீஸர் அண்மையில் வெளியிடப்பட்டது
இதன் மூலம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருக்கும் இருந்த காதல், அது எப்படி திருமணத்தில் முடிந்தது என்பதை பற்றியும் ரசிகர்கள் பார்க்க முடியும். இந்த டாக்குமெண்டரியின் பிரீமியர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.