இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருமே மிகவும் தீவிரமான கிரிக்கெட் பிரியர்கள். இருவரும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனை ரசித்து பார்வையிட்டு வருகிறார்கள். பெரும்பாலான இந்த ஐபிஎல் போட்டிகளை அவர்கள் ஸ்டேடியம் சென்று ரசித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் இந்த நட்சத்திர ஜோடி சென்னையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் சென்று பார்வையிட்டுள்ளனர்.


 



அவர்களுடன் இசையமைப்பாளர் அனிருத்  ரவிச்சந்திரனும் சென்றுள்ளார். அவர்கள் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருக்கும் புகைப்படங்கள் சில ஏற்கனவே இணையத்தில் வைரலாக பகிரப்பட்டது. விக்னேஷ் சிவன் மஞ்சள் நிற ஜெர்ஸியின் CSK அணியை உற்சாகப்படுத்துவதை காண முடிந்தது. அவருடன் நயன்தாரா பெரிய அளவில் மேக்கப் இப்பம் வைட் ஷர்ட்டில் காணப்பட்டார்.


விக்னேஷ் சிவன் போஸ்ட்:


விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். "MSD வெளியேறுகிறார். அவருக்கும் அவரது எல்லோ ஆர்மிக்காகவும் உற்சாகமான சியர்ஸ். இந்த வைப்ஸை வேறு எங்கும் காண முடியாது " என பதிவிட்டுள்ளார். 


விக்னேஷ் சிவன் ஒரு மிகவும் பெரிய கிரிக்கெட் மற்றும் மகேந்திர சிங் தோனியின் ரசிகர் . காதல் மனைவியுடன் தனது ஃபேவரட் கிரிக்கெட்டர் தோனியின் ஆட்டத்தை நேரில் கண்டு ரசிக்க சென்றுள்ளார். அங்கு ஸ்டாண்டில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சந்தோஷமாக சிரித்து பேசும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


பாலிவுட்டில் அறிமுகம் :


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உடன் இணைந்து நடிக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி, சுனில் குரோவர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


ஜவான் படத்தை தொடர்ந்து நயன்தாரா இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் 'நயன்தாரா 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார்.