என் குழந்தைகளோட அம்மா.. நயன்தாரா குறித்து விக்கி சொன்னது என்ன? மீண்டும் வைரலாகும் விக்கியின் போஸ்ட்..

2020-ஆம் ஆண்டின் அன்னையர் தினத்தையொட்டி "எதிர்காலத்தில் எனது குழந்தைகளுக்கு தாய்" என்று தலைப்பிட்டு விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்காக ஒரு இன்ஸ்டா போஸ்ட் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

Vignesh Shivan - Nayanthara :  "என் வருங்கால குழந்தைகளின் தாய்" விக்னேஷின் ப்ளாஷ்பேக் ஸ்டோரி..

Continues below advertisement

சமீப காலமாக தென்னிந்திய சினிமா பற்றின தலைப்புச்செய்திகளில் நிச்சயமாக இடம்பெறும் ஒரு ஜோடி லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன். அவர்கள் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ் கபில். அடிக்கடி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைப்பர். அப்படி ஒரு ரொமான்டிக் போஸ்ட் தான் விக்னேஷ் சிவன் தற்போது பதிவிட்டு நம்மை சந்தோஷப்படுத்தியுள்ளார். அந்த இன்ஸ்டா பதிவு தற்போது புயல் வேகத்தில் வைரலாகி வருகிறது.   

காதல் கனிந்து திருமணத்தில் முடிந்தது: 

பல வருடங்கள் காதலர்களாக இருந்த இந்த காதல் ஜோடியின் திருமண ஜூன் 9-ஆம் மிக மிக பிரமாண்டமாய் அரங்கேறியது. இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பரஸ்பர அன்பு காதல்தான் அதற்கு காரணம். இருவரும் "மேட் ஃபார் இச் அதர்" கபில் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இவர்கள் இருவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் செய்யும் போஸ்ட், வீடியோ, செய்திகளுக்காக அவர்களின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். அதனாலேயே இந்த ஜோடி அடிக்கடி தங்களது அன்பான புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்து புயல் வேகத்தில் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்குவர். அப்படி ஒரு சூறாவளியை தான் தற்போது விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் கிளப்பியுள்ளார். 

அன்னையர் தின ஸ்பெஷல் போஸ்ட்:

2020-ஆம் ஆண்டின் அன்னையர் தினத்தையொட்டி விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலி - மனைவி நயன்தாராவின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் ஒரு குழந்தையை மிக அழகாக தூக்கி வைத்திருத்துள்ளார். இந்த புகைப்படமே ஒரு ஸ்பெஷல்தான் என்றாலும் விக்னேஷ் தனது மனைவிக்காக அதற்கு ஒரு தலைப்பு வைத்து அதை மேலும் சிறப்பாகியுள்ளார். அது நம்மை அப்படியே உருகவைக்கிறது. விக்னேஷ் சிவன் நயன்தாராவை " எதிர்காலத்தில் எனது குழந்தைகளுக்கு தாய்" என்று தலைப்பிட்டு அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

மேலும் “எனது எதிர்கால குழந்தைகளின் தாயின் கைகளில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டு இருந்தார். இவர்களின் காதல் அப்படியே திரை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. விக்னேஷ் சிவன் பகிந்து அந்த ரொமாண்டிக் புகைப்படம் இங்கே உங்களுக்காக உள்ளது. பார்த்து என்ஜாய் செய்யுங்கள்.  

டாக்குமெண்டரியாக்கப்படும் விக்னேஷ் - நயன் காதல் கதை :

விக்னேஷ் சிவன் தனது காதலியின் மீது உள்ள அன்பை வெளியிடுவதில் ஒரு போதும் தவறுவதில்லை. இதற்கு சாட்சியாக இருக்கிறது அவர்களின் சமூக ஊடக பதிவுகள். அவர்களின் காதல் கதை ஒரு டாக்குமெண்டரியாக  நெட்ஃபிக்ஸ் உருவாக்கிவருகிறது. அதற்கு "பியோண்ட் தி ஃபேரிடேல்" என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் டீஸர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருக்கும் இருந்த காதல், அது எப்படி திருமணத்தில் முடிந்தது என்பதை பற்றியும் ரசிகர்கள் பார்க்க முடியும். இந்த டாக்குமெண்டரியின் பிரீமியர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement