சக பாலிவுட் நடிகை ஒருவர் தன்னுடைய உடை உடுத்தும் ஸ்டைலைச் சுட்டிக்காட்டிப் பரிகாசம் செய்ததாகப் பேசியிருக்கிறார் நடிகை வித்யா பாலன். என்ன நடந்தது? பாலிவுட்டில் பரிநீத்தா என்கிற படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை வித்யா பாலன். பா, கிஸ்மத் கனெக்‌ஷன், இஷ்கியா, தம் மரோ தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான ஷேர்னி திரைப்படம் அங்கே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் அவர் வனத்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இந்த நிலையில் ரேடியோ நேர்காணல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள வித்யா பாலன் சக நடிகை ஒருவர் தனது உடை உடுத்தும் ஸ்டைல் குறித்து விமர்சனம் செய்ததைப் பற்றிக் குறிப்பிட்டு பேசினார்.





‘அது ஷூட்டிங் சமயம். அந்த நடிகை எனது உடை உடுத்தும் ஸ்டைலை விமர்சனம் செய்தார்.எனக்கு அவரிடம் நீங்கள் ஏன் உங்களது நடிப்பில் அக்கறை செலுத்தக்கூடாது எனக் கேட்கவேண்டும் போல இருந்தது ’ எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்படி எதுவும் பதில் சொன்னீர்களா எனக் கேட்டதற்கு, ‘இல்லை.அவர் அப்படிச் சொன்னதும் நான் அப்படியே உறைந்துவிட்டேன்.அவருக்கு அப்படி என்னிடம் சொல்ல எப்படி தைரியம் வந்தது என நினைத்தேன். ஏனென்றால் நான் எப்படி உடை அணிகிறேன் என்பது அவருக்குச் சற்றும் தேவையில்லாத விஷயம். தற்போது என்ன நடந்தது என யோசித்தபடியே அவருக்கு பதிலளிக்க மறந்துவிட்டேன். உடைகளைப் பற்றிப் விமர்சனம் செய்வது ஈசிதான். ஆனால் தான் ஒரு உண்மையான நடிகர் என்றால் அவரது நடிப்பிலும் அவர் கவனம் செலுத்த வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்’ என்றார். 






வித்யா பாலனுக்கு புடவை உடுத்துவது பிடிக்கும் என்பது ஊரறிந்த விஷயம். தேசிய கைத்தறி தினத்தன்று தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் கைத்தறி ஆடைகளை உடுத்தும்படியும் கைத்தறியை அனைவரும் ஆதரிக்கவேண்டும் என்றும் வித்யா கோரிக்கை விடுத்திருந்தார்.


AbpExclusive | ''முதல்நாளே சார்பட்டா பார்த்த அஜித்.. விடியற்காலை வந்த போன்'' - எக்ஸ்க்ளூசிவ் தகவல்