வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக உள்ள விடுதலை படம் தொடர்பான பல சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விடுதலை’ சூரி, விஜய்சேபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப்படத்திற்கு இளையாராஜா இசையமைக்கிறார். போலீஸ் அதிகாரியாக சூரியும், கைதியாக விஜய்சேதுபதியும் நடிக்கும் இந்தப்படத்தின் முதற்கட்ட படிப்பிடிப்பு சத்தியமங்கலம் கடம்பூர் மலையிலும், இராண்டாம் கட்டபடப்பிடிப்பு செங்கல் பட்டிலும் நடந்து முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
படப்பிடிப்பு 50 ஆவது நாளை எட்டியிருக்கும் நிலையில், படப்பிடிப்பிற்காக சிறுமலை வனப்பகுதியில் வீடுகள், மைதானம், கோயில் என எல்லாம் இருக்கும் படியான ஒரு அழகான கிராமத்தை உருவாக்கி இருக்கிறாராம் படத்தின் கலை இயக்குநர் ஜாக்கி. படத்தில் சிறுவர்களும் நடித்துள்ளார்களாம். சிறுமலை பகுதியின் இன்னொரு பகுதியில் விஜய்சேதுபதிக்கும் போலீசுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆக்சன் காட்சிகளில் விஜய்சேதுபதி டூப் இல்லாமல் நடித்திருக்கிறாராம். விஜய் சேதுபதி 30 நாட்கள் தொடர்ந்து நடித்து தன்னுடைய காட்சிகள் எல்லாவற்றையும் நடித்துக்கொடுத்து விட்டாராம். சூரி மற்றும் பிற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஜூன் 10 ஆம் தேதிக்குள் முடிவடைய உள்ளது.
மேலும் இங்கேயே 2 ஆக்சன் காட்சியும் , பாடல்களும் படமாக்கப்பட்டுள்ளதாம். படப்பிடிப்பு நடக்கும் இடம் முழுக்க முழுக்க காடு என்பதால், விஷப்பாம்புகள், காட்டெருமைகள், காட்டு நாய்கள், பூச்சிகளை கடந்தே படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறதாம். இதனால் படப்பிடிப்பில் 24 மணி நேரமும் மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸை தயாரிப்பு நிறுவனம் நிறுத்தி வைத்திருக்கிறதாம். கடந்த 50 நாட்களாக இப்படத்தினை சார்ந்த 450 படக்குழுவினர் சிறுமலை மலைப்பகுதியில் தங்கியுள்ளனர். இப்படத்தில் மேலும் பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், சேத்தன் மற்றும் மிகவும் பிரபலமான நம்பிக்கைக்குரிய பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.