ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு  தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் படம் விடுதலை.


விடுதலை:


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக உள்ள வெற்றிமாறன் அசுரன் படத்திற்குப் பிறகு இயக்கி வரும் படம் ‘விடுதலை’. சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். முதல் முறையாக வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபதி போராளியாக நடித்து வருகிறார்.


மேலும் விடுதலையில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் இணைந்துள்ளார். அதேபோல் தனுஷூம் ஒரு பாடலை பாடியுள்ளதால் எப்போது இந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.


விரைவில் ரிலீஸ்


நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நிலையில், கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாளை முன்னிட்டு  விடுதலை படம் 2 பாகங்களாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. 


சென்ற மாதம் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தன் ரசிகர்களுக்கு இப்படம் குறித்து சுடச்சுட அப்டேட் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி. 


 






அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளதாகக் கூறி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய் சேதுபதி, பூஜை புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.


 






விடுதலை படத்தில் நடிகர் சூரியின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஏற்கெனவே ரசிகர்களை ஈர்த்து வரும் நிலையில், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.