ஜெயமோகனின் "துணைவன்" நாவலின் அடிப்படையில் வெற்றிமாறன் இயக்கி வரும் "விடுதலை" திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்ற தகவலை ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார் நடிகர் சூரி.


 



 


ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் மற்றும் சூரி நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். 






 


இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவு :


எழுத்தாளர் ஜெயமோகனின் "துணைவன்" நாவலின் அடிப்படையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள "விடுதலை" திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது எனும் தகவல் ஏற்கனவே வெளியானது. அந்த வகையில் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் சிறுமலை போன்ற இடங்களில் நடைபெற்று வந்தது. 






 


விடுதலை 2 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் :


நடிகர் சூரி இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து  விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முழுமையாக முடிவடைந்து விட்டது எனும் அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார்.