விதார்த்
பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார் வித்தார்த். கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற விதார்த் பல்வேறு துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மைனா படத்திற்கு பிறகு சினிமாவில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் அமைந்தன. கமர்ஷியல் ரூட்டை பின்பற்றாமல் நடிப்பிற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார் விதார்த்.
மணிகண்டன் இயக்கிய குற்றமே தண்டனை , சுரேஷ் சங்கையா இயக்கிய ஒரு கிடாயின் கருணை மனு , ராதா மோகன் இயக்கிய காற்றின் மொழி , நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கிய குரங்கு பொம்மை கடந்த ஆண்டு வெளியான டெவில் உள்ளிட்ட படங்கள் விதார்த்தின் திறமையை வெளிப்படுத்தும் படங்களாக அமைந்தன.
அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அஞ்சாமை
எஸ்.ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு 'அஞ்சாமை' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஓ மை கடவுளே , லவ் ஆகிய படங்களில் நடித்த வானி போஜன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். எஸ் பி சுப்புராமன் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ராகவ் பிரசாத் இசையும் கலா சரண் பின்னணி இசையும் அமைத்துள்ளார்கள்.
கார்த்திக் ஒளிப்பதிவும், ராம் சுதர்சன் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போபோஸ்டரில் 'உயிர்பலி வாங்கிய நீட்’ என்கிற வாசகம் இடம்பெற்றிருப்பது இப்படம் நீட் தேர்வுகளால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பிரச்னைகளை மையப்படுத்து எடுக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.