பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் ஜிம் கேரியை கண்ணத்தில் அறைந்தார். அந்தச் சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் வில் ஸ்மித் மன்னிப்பும் கோரினார். இந்தச் சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
அதில், “ஹாலிவுட் குடும்பத்திற்கு எப்போதும் முதுகெழும்பு என்பது கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் வில் ஸ்மித் சம்பவம் இருந்துள்ளது. அப்படி மேடையில் ஒருவரை அவமானப்படுத்திய பிறகு அவருக்கு அனைவரும் எழுந்து நின்று அரவாரம் செய்கின்றனர். உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அது தொடர்பாக நீங்கள் பதில் கருத்து சொல்லாம். ஆனால் அதற்கு பதிலாக மேடையில் ஒருவரை அவமானப்படுத்தக் கூடாது” எனக் கூறியிருந்தார்.
மேலும் அவர் வில் ஸ்மித் மீது வழக்கு ஒன்றை தொடர்ப்போவதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் ஜிம் கேரி 1997ஆம் ஆண்டு செய்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு எம்டிவி விருது வழங்கும் விழாவில் 21 வயது நடிகை ஒருவரை அனுமதியில்லாமல் முத்தம் கொடுத்தார். அந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை தற்போது பதிவிட்டு பலரும் வில் ஸ்மித்திற்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்