தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை நடித்து வருகிறார். அந்தவகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் கீர்த்தி சுரேஷ் தற்போது இணைந்து ஒரு திரைப்பட்டத்தில் நடித்து வருகிறார். ’சர்காரு வாரி பட்டா’ என்ற திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்தப் படத்தின் கலாவதி என்ற பாடல் கடந்த வாரம் யூடியூபில் வெளியானது. இந்தப் பாடல் பல ரசிகர்களின் ஆதரவை பெற்றது. இந்நிலையில் இந்தப் பாடல் தொடர்பாக பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது படத்தின் கதாநாயகியான கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் பாடல் தொடர்பான ரீல்ஸை பதிவிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
முன்னதாக இந்தப் படத்தின் பாடலுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சிதாரா இந்தப் பாடலுக்கு இன்ஸ்டா ரீல்ஸ் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை மகேஷ் பாபு தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் என்னைவிட நீ நன்றாக ஆடியிருந்தாய் என்றும் அவர் தன்னுடைய மகளை பாராட்டி இருந்தார். அந்த வீடியோவையும் பலரும் பார்த்து ரசித்து வந்தனர்.
இந்த தெலுங்கு படம் விரைவில் திரையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க:ஆல்யாவுக்குத் தான் டாப்.. ஒருநாள் சம்பளமே இவ்வளவா? ராஜா ராணி சீரியல் சம்பள விவரம்!