நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் டீசர் நேற்று இரவு 11.08 மணிக்கு வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. டீசர் குறித்து அஜித் ரசிகர்களின் ரியாக்ஷன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
விடாமுயற்சி டீசர்:
லைகா நிறுவனத்தின் மிக முக்கியமான படங்களுள் ஒன்றாக கருதப்படும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் தினந்தோறும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வந்தனர், இந்த நிலையில் நேற்று இரவு விடாமுயற்சி டீசர் வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியானது..இந்த டீசர் சொன்ன நேரத்திற்கு வெளி வருமா என்று அஜித் ரசிகர்கள் குழம்பிய நிலையில் ”இருங்க பாய் மொமண்ட் போல” சரியாக 11.08 இந்த டீசர் வெளியானது.
ஹாலிவுட் தரத்தில் டீசர்:
நீண்ட நாட்களாக டீசருக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த டீசர் ஒரு நல்ல தீணியாக அமைந்தது. படத்தின் காட்சியமைப்புகள் அனைத்து ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ளது. அனிருத்தின் பிண்ணனி இசையும் டீசருக்கு மேலும் பலத்தை கூட்டியது. “எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு என்று ஒரு இன்ஸ்பிரேசனுடன் இந்த டீசரானது முடிந்தது.
அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்:
அஜித் ரசிகர்கள் டீசர் வந்தவுடன் இணைய தளத்தில் டிரேண்ட் செய்து வருகின்றனர். அதில் டீசரை குறித்து தங்கள் கருத்துகளையும் அவர்கள் கூறி வருகின்றனர். அதில் ரசிகர் ஒருவர் டீசருக்கு எல்லா பக்கமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
மற்றோரு ரசிகர் டீசரில் அஜித் மற்றும் த்ரிஷா வரும் காட்சியை படமாக்கிய விதத்தை பார்த்து.,”ஃபெரம்மை பாருங்க ஜி மொமண்ட்” என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் டீசரின் இறுதியில் வரும் தீம் இசையானது ரசிகர்களை பெரிது கவர்ந்துள்ளது. அனிருத் டீசருக்கு நல்ல பிண்ணனி இசையை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
பொங்கலுக்கு வெளியாகும் விடாமுயற்சி:
விடாமுயற்சி படமானது வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் வெளியாகும் Good,bad,Ugly திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படமும் வெளியானால் அஜித் ரசிகர்களுக்கு டபுல் பொங்கல் டீரீட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.