Vidaamuyarchi viral picture: விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித்துடன் விஜய் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

 

விடாமுயற்சி:


 

இயக்குநர் வினோத் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு  வெளியானது முதலே பல மாற்றங்கள் நடந்தது. விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அந்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் என்றும், அதற்கு விடாமுயற்சி என பெயர் வைத்ததும் அறிவிப்பு வெளியானது.  லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
  

 

படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜூன், பிக்பாஸ் ஆரவ், சஞ்சய் தத் என பலர் நடித்து வருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அதற்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் வெளிநாட்டில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித், த்ரிஷா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

 





லேட்டஸ்ட் படங்கள்:


விடாமுயற்சி படத்தில் அஜித்தின் பெயர் அர்ஜுன் என கூறப்பட்டிருக்கிறது. தற்போது விடாமுயற்சி  புகைப்படங்கள் வெளியாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. அஜித், த்ரிஷா இணைந்து ஜீ, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். இருவரின் காம்போ ரசிகர்களை பெரிதாக கவந்த நிலையில் மீண்டும் ஒன்றாக நடித்து வருகின்றனர். அண்மையில் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த லியோ படம் வசூலில் சாதனை படைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில், விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார்.