அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் நாளை (பிப். 6) திரைக்கு வருகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விடாமுயற்சி படம் மிரட்டலாக உள்ளது என சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விடாமுயற்சி ரிலீஸ்:


தமிழ் திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர். அஜித்குமார். இவர் நடிப்பில் 2023-ல் வெளியான துணிவு திரைப்படத்திற்கு பிறகு, விடாமுயற்சி திரைக்கு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திரையில் அஜித் நடிப்பை காணும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். விடாமுயற்சி திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சியை திரையிட்டுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.



VidaaMuyarchi First Review: நடிப்பில் மிரட்டும் அஜித் குமார்; ரசிகர்களுக்கு ட்ரீட்! விடாமுயற்சி முதல் விமர்சனம்!


அஜித் படம் குறித்த அப்டேட்களை ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் கேட்பது நடந்தது. அதற்கு விடையாக விடாமுயற்சி வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், டீசர், புகைப்படங்கள் என எந்த அறிவிப்பு என்றாலும் சமூக வலைதளங்களில் ‘விடாமுயற்சி’ படத்தை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். விடாமுயற்சி பாடல்கள் என ரசிகர்கள் கொண்டாட்டனர். விடாமுயற்சி நாளை திரையரங்கில் வெளியாகிறது.




 


விடாமுயற்சி முதல் விமர்சனம்:


ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் படத்தின் ரீமேக் விடாமுயற்சி. மனைவியை தேடும் கணவனின் போராட்டமே விடாமுயற்சி படத்தின் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரேக்டவுன் கதை பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், ரீமேக்கில் கதை மாற்றப்பட்டுள்ளதா என்பது படம் பார்க்கும்போது தெரியும். இது வழக்கமான அஜித் படமாக இல்லாமல் மாறுபட்ட குடும்ப ஆக்ஷன் படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் பிரபலமான திரையரங்கில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் மட்டும் விடாமுயற்சி படத்திற்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. பல ஊர்களில் அதிக திரையங்குகளில் வெளியாகிறது. ரசிகர்கள் விடாமுயற்சி முதல் காட்சிக்காக காத்திருக்கின்றனர். இன்றைய (பிப்ரவரி,5) இரவு ரசிகர்களுக்கு நீண்டதாக கூட இருக்கலாம். 








லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் த்ரிஷா, அர்ஜுன், அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ மிரட்டலாக உள்ளது என சமூக வலைதளத்தில் பிரபலமான பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில்,”விடாமுயற்சிக்கு (First Review {4.75/5}) ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதை விறுவிறுப்புடன் த்ரில்லிங்காக உள்ளது. அஜித் குமா, அர்ஜூன் கதாபாத்திரம் மிரட்டலாக எழுதப்படுள்ளது. மனைவி காணாமல் போவது, அவரைத் தேடி அஜித் செல்வது ஆகிய காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. டிவிஸ், ஸ்க்ரிட்ப் என எல்லாம் சிறப்பாக உள்ளது.







அஜித் குமார் நடிப்பில் மிரட்டியிருக்கார். அஜித் நடிப்பு லெவல் அப்க்ரேட் ஆகியிருப்பதை இந்தப் படத்தில் காணலாம். விடாமுயற்சி க்ளைமேக்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பைவிடவும் மிரட்டலாக உள்ளது. அனிருத் இசை சிறப்பு. பின்னணி இசை ரசிகர்களை துள்ளலுடன் படத்தை காண வைக்கும். மேஜிக்கல் அனுபவம். நடிகர் அஜித் குமாரின் கதை தேர்வும் அருமை.” என அவர் விமர்சனம் தெரிவிக்கிறது. 


விடாமுயற்சி படத்தில் இருந்து ‘தனியே தள்ளாடிப் போகிறேன்..,’ 3-ஆவது பாடல் இன்று(பிப். 5)  வெளியானது. அஜித் குமார் திரையில் காண்பதை ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.





மேலும் வாசிக்க..