விடாமுயற்சி:
அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட அஜித் குமாரின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் தேதியும் நெருங்கிவிட்டது. 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே ரசிகர்களின் கவனம் முழுவதையும் தன் பக்கம் திருப்பினார். துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் வெற்றி பெற்று 3ஆவது இடம் பிடித்தார். பொங்கல் பண்டிகையை குறிவைத்து ஜனவரி 10ஆம் தேதி வெளியாக இருந்த விடாமுயற்சி திரைப்படம் ஒரு சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், விடாமுயற்சி தள்ளி போனது அஜித் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தது. இதன் பின்னர் ரசிகர்களும் எப்போது படம் ரிலீஸ் ஆகுதோ அன்று தான் ரிலீஸ் தேதி என நாம் பிக்ஸ் பண்ணி கொள்ளலாம் என சலித்து கொண்டு, சமூக வலைதளத்தில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.

பிப்ரவரி 6 அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ்:
ஒருவழியாக விநியோகஸ்தர் தரப்பில் இருந்த பிரச்சனைகளை லைகா பேசி முடித்து, விடாமுயற்சி படத்தை பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு கொண்டு வர முடிவு செய்தது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய இந்தப் படத்தில் அஜித் உடன் இணைந்து த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக விடாமுயற்சி படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்தப் படத்தில் இடம் பெற்ற 'சவத்தீகா' என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பத்திக்கிச்சு என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவும் வெளியாகி பட்டையை கிளப்பியது.
மகிழ் திருமேனி:
இந்த நிலையில் தான் இயக்குநர் மகிழ் திருமேனின் விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்தது பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார். அஜித் ஒரு ஸ்டைலிஷ் ஆக்டர். பலவிதமான ரோல்களில் அஜித் நடித்து பார்த்திருப்போம். அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அப்படிப்பட்ட அஜித்தின் நடிப்பை விடாமுயற்சி படத்தில் திரும்ப திரும்ப நாம் பார்க்கலாம். இந்தப் படத்தில் வரும் சண்டைக் காட்சிகளை எல்லாம் அவரே நடித்துள்ளார். ஒரு காட்சியில் கூட டூப் போடவில்லை. அவர் சண்டைக் காட்சியில் நடிப்பதை நேரில் இருந்து பார்த்து ரொம்பவே பிரமித்து போய் விட்டேன் என்று கூறியுள்ளார்.