வேட்டையன்


த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 வெளியானது. அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , துஷாரா விஜய , மஞ்சு வாரியர் , ரானா டகுபடி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. 

Continues below advertisement


வேட்டையன் படத்திற்கு சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பப்பட்டாலும் படம் வெகுஜன ரசிகர்களிடம் பாஸ் மார்க் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியான நான்கு நாட்களில் உலகளவில் 240 கோடி வசூலித்துள்ளது. இதனை படக்குழு நேற்று ரஜினியுடன் கொண்டாடினார்கள். சென்னையில் கடும் மழை காரணமாக வேட்டையன் படத்தில் இரண்டாவது வார வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை தவிர்த்து ஆந்திரா மற்றும் கேரளாவில் படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் மற்ற மாநிலங்களில் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கலாம்.


வேட்டையன் ரஜினி ஃபகத்  காம்போ


ஞானவேலின் திரைக்கதை , ரஜினியின் மாஸ் காட்சிகள் , அனிருத்தின் இசை என படத்தில் நிறைய பாசிட்டிவான அம்சங்கள் இருந்தாலும் வேட்டையன் படத்தில் ரசிகர்களை அதிகம் கவந்தது ரஜின் ஃபகத் காம்போ. ஃபகத் ஃபாசில் நடித்துள்ள பேட்டரி கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது . மேலும் ரஜினி மற்றும் ஃபகத் இசையிலான காமெடி காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படுகின்றன. அந்த வகையில் வேட்டையன் படத்தில் ரஜினி ஃபகத் இடையிலான நீக்கப்பட்ட காட்சி ஒன்றை தனியாக வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக இந்த காட்சி அமைந்துள்ளது.