ஜெயமோகனின் "துணைவன்" நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் "விடுதலை". இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பார்ட் ஜனவரி 26ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் மற்றுமொரு அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறனிடம் இருந்து வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. .
நீண்ட கால படப்பிடிப்பு முடிவடைந்தது :
ஜெயமோகனின் "துணைவன்" நாவலை அடிப்படையாக கொண்டு 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு 2020ம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டு வந்தது. இரண்டு பார்ட்களாக இப்படம் உருவாகி வருவதால் வழக்கமான தயாரிப்பை விடவும் இது சற்று நீளமானது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக நடைபெறவுள்ளது.
உடனே வெளியாகும் பார்ட் 2 :
ஜனவரி 26ம் தேதி 'விடுதலை' படத்தின் முதல் பாகம் வெளியாவதால் ரசிகர்களை அதிக நேரம் காக்க விடாமல் உடனடியாகவே இரண்டாம் பாகத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.
வாடிவாசல் படப்பிப்பு ஆரம்பம் :
ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரியுடன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், பவானி ஸ்ரீ, இயக்குனர் ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியான உடனே வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளார். இரண்டு தேசிய விருது கலைஞர்களும் ஒன்றாக இணையும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.