விடுதலை 2:
காமெடி பீஸாக பார்க்கப்பட்ட சூரியை, 'விடுதலை' படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக மாற்றி உள்ளார் வெற்றி மாறன். இதுவரை பார்த்திடாத ஒரு விஜய் சேதுபதியை திரையில் காட்டியுள்ளார். எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு எக்க சக்கம் எகிறி போய் உள்ளது.
வெற்றிமாறன்:
வெற்றிமாறன் இதுவரை தமிழில் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, விடுதலை என்று எல்லா படங்களையும் சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த படங்கள். கமெர்ஷியலுக்காக மட்டுமே படம் இயக்குனர் இயக்குனர்கள் மத்தியில், ஆழமான கதையோடு ஒன்றி போய் படம் இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் வெற்றிமாறன் தனித்துவமாகவே பார்க்க படுகிறார். இவருடைய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெறுவதன் ரகசியமும் இதுதான்.
தற்போது விடுதலை 2-ஆம் பாகத்தை இவர் இயக்கி முடித்துள்ள நிலையில், இந்த படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுதலை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உள்பட இளையராஜா என அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய வெற்றிமாறனிடம், உதவி இயக்குநர்கள் பெயரை சொல்லும்படி சொல்ல அவர் நான் தான் டீம் என்று சொல்லிவிட்டேனே என்று கூற பின்னர் கோபமாக நன்றி என்று சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.
விஜயை சீண்டினாரா வெற்றிமாறன்:
விடுதலை 2 டிரைலரில் வரும் தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்கள் மட்டுமே உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது என்று விஜய் சேதுபதி டயலாக் பேசுவார். இது விஜய்யை மறைமுகமாக சாடியதாக சில சர்ச்சைகள் எழுந்த நிலையில், பின்னர் அந்த பிரச்னையும் ஓய்ந்தது. விடுதலை படத்தின் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி ஏன் கைது செய்யப்பட்டார்? சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக எப்படி கிளர்ச்சியை தேர்வு செய்தார் என்பது போன்ற பல கேள்விகளுடன் இந்த படத்தை முடித்திருப்பார் வெற்றிமாறன்.
விஜய் சேதுபதி - மஞ்சு வாரியர்:
இவை அனைத்துக்கும் இரண்டாம் பாகம் பதில் சொல்ல வருகிறது. எனவே முதல் பாகத்தை விட விடுதலை பார்ட் 2 விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. முதல் பாகத்தில் நடித்திராத நடிகை மஞ்சு வாரியர் மற்றும் அனுராக் காஷ்யப் 2ஆம் பாகத்தில் வருகிறார்கள். விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியாராக இளம் வயது தோற்றத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் கதாபாத்திரமும் பெரிதாக பேசப்படும் என்று தெரிகிறது.
இளையராஜா பேச்சு:
இந்த நிலையில் தான் இந்தப் படம் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா தனது கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். "அதில் அவர் கூறியிருப்பதாவது: விடுதலை முதல் பாகத்தை பார்த்த பிறகு அதனுடைய 2ஆம் பாகம் தனி ரூட்டில் எடுக்கப்படும் என்று நினைத்தேன். ஆனால், அவர் நான் நினைத்ததை விட வேறு ஒரு டிராக்கில் சென்று கொண்டிருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு நான் எந்த காட்சிகளை எல்லாம் பாராட்டினேனோ... அதையெல்லாம் அவர் பக்காவா டெலிட் பண்ணிட்டாரு. நாம் நினைக்கிற காட்சிகளை எப்படி அவர் வைப்பார். அவர் தானே இயக்குநர். அவர் என்ன வைக்கிறாரோ அதைத் தான் நாம் பார்க்க முடியும். படைப்பு அவரோடது என்று புலம்பி தள்ளியுள்ளார். வெற்றிமாறன் கொடுத்த ட்விஸ்டில் பாவம் இளையராஜாவே டென்சன் ஆகிட்டாரு போல...