வைஜயந்தி மாலா
இந்திய திரையுலகின் மூத்த நடிகைகளில் ஒருவர் வைஜயந்தி மாலா. நடிகர் மட்டுமில்லாமல் இவர் ஒரு நடனக் கலைஞரும் கூட. வைஜயந்தி மாலா இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து அவரது மகன் சுசிந்திரா பாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாக்டர் வைஜயந்தி மாலா உயிரோடு இருப்பதாகவும் மற்ற தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் தெரிவித்துள்ளார். இந்த மாதிரி பொய்யான தகவல்களை பகிர்வதற்கு முன்பு சரிபார்த்துக் கொள்ளவும் என்றும் அவர் கூறியுள்ளார்