நடிகர் விஜயின் தளபதி 68 படம் தொடர்பாக இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு சமூக வலைதளங்கில் வைரலாகியுள்ளது.
வெங்கட் பிரபு ட்வீட்:
இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “”எதிர்காலத்திற்கு வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, உடல் முழுவதையும் ஸ்கேன் செய்யும் 360 டிகிரியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்ட ஒரு தொழில்நுட்ப குடுவைக்குள், நடிகர் விஜய் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும், அந்த தொழில்நுட்பம் தொடர்பான போஸ்டர் ஒன்றை நடிகர் விஜய் பார்ப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது விஜய் ரசிகர்களால் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. தளபதி 68 படத்தில், டி-ஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் இளம் வயது விஜயை காண்பிப்பதற்காக தற்போது அவரது உடல் முழுவதும் ஸ்கேன் செய்யபப்ட்டுள்ளது.
கலிபோர்னியாவில் டீ-ஏஜிங்:
கலிபோர்னியாவில் உள்ள USC ICT எனும் ஒரு கல்லூரியில் தான் 3டி முறையில் டீ-ஏஜிங் எனப்படும், இந்த வயதை குறைக்கும் தொழில்நுட்ப பணிகள் தளபதி 68 பணிக்காக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவத்தின் நிதியுதவி பெற்று செயல்படும் இந்த கல்லூரி, அவதார் , ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் ஆகிய படங்களில் பணியாற்ற் ஆஸ்கர் விருதுகள் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனம் தளபதி 68 மூலம் முதன்முறையாக இந்திய சினிமாவிற்குள் நுழைகிறது. முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்த்லும் இதே தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஷங்கர் வெளியிட்ட புகைப்படமும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்
நடிகர் விஜய்யின் 68 வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநர் வெங்கட் பிரபு முதல்முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார். தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஜெய் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாகவும் அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் அவரது உடல் ஸ்கேன் சோதனை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விஜய் - லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.