வெந்து தணிந்தது காடு படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் கெளதம் மேனன் பட விமர்சகர்களை தாக்கி பேசியிருக்கிறார். 


இது குறித்து கெளதம் மேனன்  பேசும் போது, “  ஏதாவது பேசினா தப்பாகிருமான்னு கூட தெரியல. காலையில நம்ம பிளைட்டுக்கு போறோம் அப்படின்னா அம்மா நல்லா தூங்கிட்டு போ அப்படின்னு சொல்லுவாங்க.. பிளைட்டுக்கு போய் தூங்கலாம்னு தெரியும்.




ஆனாலும் அம்மா சொல்லுவாங்க.. அந்த அர்த்தத்தில்தான் நான்  ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் காட்சியை பார்க்க வரும் முன் நன்றாக தூங்கி விட்டு வாருங்கள் என்றேன். என்னோட மற்ற படத்தை விட இந்தப்படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களே வந்திருக்கு. நெகட்டிவான விமர்சனங்களும் வந்திருக்கு. அதுல இருந்து பாடங்களை நிறைய கத்துருக்கோம்.


பொழப்புல மண் போடுற வேலையா


இன்னொருத்தர்  பொழப்புல மண் போடுற வேலையா இந்த விமர்சனங்கள்னு தோணுது. ஏன் அப்படின்னா இதுல மட்டும்தான் மத்தவங்க பாதிக்கப்படுறாங்க. அது படத்தின் ஒட்டுமொத்த அவுட்புட்டையும் பாதிக்கிறது. சில சமயங்களில் அது நடக்கிறது. சில சமயங்களில் அது நடப்பதில்லை.” என்று பேசியிருக்கிறார். 


விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3 வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள  இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார்.


 






விநியோக உரிமையை உதயநிதியின்  ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தில் சிலம்பரசனின் நடிப்பும், ஏ.ஆர்.ஆரின் இசையும் பெரிதளவில் பாராட்டைப் பெற்றாலும், கதையின் நீளமும், இராண்டாம் பாதியில் அமைந்த சொதப்பலான திரைக்கதையும் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதை முதல் காட்சி முடிந்த உடனே பார்க்க முடிந்தது. இதனை பல விமர்சர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். அதே நேரம் சில விமர்சகர்கள் படத்தை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்திருந்தனர்.