விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சித்தா படம் இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன். தில், தூள், சாமி போன்ற கேட்டகரியில் மாஸ் படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மார்ச் 27 ஆம் தேதியான இன்று வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் வீர தீர சூரன் திரைப்படத்துக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது.