வாரிசு படத்தின் ட்ரெய்லர்
துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற காரணத்தினால், அதை விட சிறந்த ட்ரெய்லரை கொடுக்க வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்ததாகவும் அத்துடன், எடிட் செய்ப்பட்டிருந்த ட்ரெய்லரை மீண்டும் எடிட் வேலைக்காக அனுப்பியதாகவும், இதனால்தான் ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திப்போனதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அனைவரும் எதிர் பார்த்து கொண்டிருக்கும் வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது. மேலும் ட்ரெய்லரானது சன் டிவியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நாகூர் தர்கா கந்தூரி விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ஆர்
ரசிகர்களால் இசைப்புயல் என செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கந்தூரி விழாவில் கலந்து கொண்டார். இவருடன், தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானும் பங்கேற்றார். இவர்கள் மட்டுமன்றி, இந்த கந்தூரி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏ ஆர் ரஹ்மான் சந்தன கூடு திருவிழாவில் பங்கேற்ற வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
வாரிசு படத்திற்கு கிடைத்த சான்றிதழ்
வாரிசு படக்குழு தங்களின் படத்தை சென்சார் தணிக்கைகுழுவிற்கு அனுப்பியுள்ளது. 2 மணி நேரம் மற்றும் 49 நிமிட நீளத்தை கொண்ட ‘வாரிசு’ படத்திற்கு U சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது; ஆனால், இன்று வரை துணிவு மற்றும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது.
வாரிசு, துணிவு படத்தின் ரிலீஸ் எப்போது?
பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் துணிவு, வாரிசு படங்கள் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் உள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள Aries Plex SL சினிமா தியேட்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் துணிவு, வாரிசு படங்கள் ரிலீஸ் தேதி குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் துணிவு படம் ஜனவரி 11 ஆம் தேதியும், வாரிசு படம் ஜனவரி 12 ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருபடங்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும், முதல் காட்சி அதிகாலை 4 மணி எனவும் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், இரு படங்களின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலுடன் ஒத்துப்போவதால் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி உள்ளனர்.
100 கோடி உரிமம் பெற்ற சூர்யா 42
சூர்யா சிறுத்தை சிவா இணைந்துள்ள சூர்யா 42 திரைப்படத்தின் ஹிந்தி உரிமையை 100 கோடிக்கு தயாரிப்பாளர் ஜெயந்திலால் கடா கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது; அதுமட்டுமின்றி அந்த படத்தின் ஹிந்தி வெர்சனின் சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் தியேட்டர் விநியோக உரிமைகளையும் அவர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது; இதுவரை முன்னதாக எந்த தமிழ் திரைப்படமும் 100 கோடிக்கு விலை போனதில்லை.