விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் first look போஸ்டர் இன்று மாலை 6.01க்கு ரிலீஸ் ஆகியுள்ள  நிலையில், டிவிட்டரில் #thalapathy66FLDay என்ற ஹேஷ்டேக்-ஐ ட்ரெண்ட் செய்து இணையதளத்தினை ஆக்கிரமிக்கும் விஜய் ரசிகர்கள். படத்திற்கு ”வாரிசு” என டைட்டில் வைத்துள்ளனர் படக்குழுவினர். 


நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்குப் பிறகு  இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த செய்தி அதிகாரப் பூர்வமாக வெளியான நாள் முதல் விஜய் ரசிகர்கள் #தளபதி66 என்ற ஹேஷ்டேகினைக் கொண்டு டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமினை நிரப்பிட ஆரம்பித்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் தளபதி 66 படத்தின் first look போஸ்டர் இன்று  மாலை 6.01க்கு ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவலை, தளப்தி 66 படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. இதனை படத்தின் இயக்குனர் வம்சி ரீ-டிவீட் செய்து உறுதிப்படுத்தினார்.






First Look போஸ்டர்


இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வந்திருந்த  நிலையில், தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து தெரிவிக்கப்பட்ட டிவிட்டர் பதிவினை ரசிகர்கள் ரீ-டிவீட் செய்தும் லைக் செய்தும் ட்ரெண்டாக்கி வந்தனர். இந்நிலையில் இன்று மாலை 6.01க்கு படத்தின் first look போஸ்டர் எனப்படும் முதல் போஸ்டர் வெளியான நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் #thalapathy66FLDay என்ற ஹேஷ்டேக்கினை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து அதகளமாக்கி வந்தனர்.


பிரகாஷ் ராஜ் விஜய் கூட்டணி


படத்தில் ஏற்கனவே தென்னிந்திய திரைப்பிரபலங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடித்து வரும் நிலையில் இப்படம் ஒரு பேன் இந்தியா படமாக இருக்கும் என பலரும் தெரிவித்து வந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரது தீவிர ரசிகையும் தெலுங்கு திரையுலக பிரபல நடிகையுமான ரஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். கில்லி திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் நடிகர் விஜயுடன் கூட்டணி சேர்ந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் இன்று மாலை வெளியாகியுள்ள first look போஸ்டரை மிகவும் எதிர்பார்த்து #thalapathy66FLDay  என்ற ஹேஷ்டேக்கினை டிவிட்டரில் ட்ரெண்டாக்கி அதகளம் செய்து வந்தனர். படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பையும் அதிகமாக்கிருந்த நிலையில், ”வாரிசு” என்ற டைட்டிலுடன் தளபதி 66 படத்தின் first look வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.