தளபதி விஜயின் வாரிசு திரைபடத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. வாரிசு திரைப்படத்தை தெலுங்கு திரைப்பட இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி தமிழ் மற்றும் தெலுங்கிலும் இயக்க உள்ளார்.வாரிசு திரைப்படம் தில் ராஜு தாயாரிப்பில் மற்றும் தமன் இசையில் வெளியாக உள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட 'லார்கோ வின்ச்' கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு 'வாரிசு' அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.வணிக சாம்ராஜ்யத்தை தவறான கைகளுக்குச் செல்லாமல் காப்பாற்றுவதற்காக வெளிநாட்டிலிருந்து ஒரு இறந்த வணிக அதிபரின் ரகசியமான வளர்ப்பு மகன் வருவது பற்றிய கதைதான் லார்கோ வின்ச் . இந்த நாவலைத் தழுவி தான் வாரிசு திரைப்படம் தாயாராகி வருகிறது. 




'லார்கோ வின்ச்' முதன்முதலில் "ஜீன் வான் ஹம்மே" என்பவரால் எழுதப்பட்டது, பெல்ஜியத்தில் 1970 துவக்கத்திலும் மற்றும் அதன் பிறகும்  தொடர் நாவல்கள் வெளியாகி‌ உள்ளன.2001 ஆம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சித் தொடராகவும் 2008 ஆம் ஆண்டில் முதல் திரைப்படமான 'லார்கோ வின்ச்' ஜெரோம் சாலே இயக்கத்தில் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டது. அதில் டோமர் சிஸ்லி  கதாநாயகனாக  நடித்தார்,இதன் தொடர்ச்சியாக லார்கோ வின்ச் :"Empire under thread" என்ற விடியோ கேம் 2002ஆம் ஆண்டு வெளியாகி மிகவும் பிரபலமான வலம் வந்தது. 2018 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான 'அக்ஞயாதவாசி' தனது படத்தில் இருந்து திருடப்பட்டதாக இயக்குனர் ஜெரோம் சாலே குற்றம் சாட்டினார். இப்படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றிருந்த இந்தியத் தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குத் தொடுத்தது பின்னாட்களில் அது சுமூகமாகத் தீர்க்கப்பட்டது.




இயக்குனர் வம்சி ஏற்கனவே ஆலிவர் நகாச்சே & எரிக் டோலிடானோவின் பிரெஞ்சுப் படமான 'தி இன்டச்சபிள்ஸ்' திரைபடத்தை 2011 ஆம் ஆண்டு 'ஊப்பேரி மற்றும் தோழா' என அதிகாரப்பூர்வமாக தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் மற்றும் தோழா ஒரு வெற்றி படமாகவும் அமைந்தது. வாரிசு திரைப்படம் இந்திய மக்களுக்கு ஏற்ற வாரு மாற்றி அமைக்க படும் என இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார். அதனால் வாரிசு திரைப்படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருந்தும் ரிமேக் பற்றி அதிகார பூர்வமான எந்த செய்தியும் வெளிவரவில்லை."வாரிசு" திரைபடத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, சம்யுக்தா, பிரகாஷ் ராஜ் மற்றும் யோகி பாபு போன்ற நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. வாரிசு ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இந்திய மக்களுகளிடையே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு 2023 பொங்கல் அன்று உலகமெங்கும் வெளியாகும் என எற்கனவே அறிவிக்கப்பட்டது.