தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடித்திருக்கும் "வாரிசு" திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஃபேமிலி என்டர்டெயின்மெனராக உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக “ஆல் இந்தியா க்ரஷ்” ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமன் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன.






வாரிசு - துணிவு மோதல் :


ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் வாரிசு படம், வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. வாரிசு திரைப்படத்துடன் சேர்ந்து, அஜித்தின் துணிவு படமும் வெளியிடப்படுவதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. வாரிசு படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. 




ரிலீஸிற்கு முன்பே பாதி லாபம்!


சில நாட்களுக்கு முன்பு வாரிசு படம் வெளியாவதற்கு முன்பே, பாதிக்கும் மேற்பட்ட லாபத்தை பார்த்துவிட்டதாக தகவல் வெளியானது.  பிற மொழிகளின் திரையரங்கு உரிமைகள் இல்லாமலேயே, வாரிசு திரைப்படம் 280 கோடி லாபம் பார்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், படத்தின் 55 சதவீத லாபத்தினை, பட ரிலீஸிற்கு முன்னதாகவே வாரிசு உரிமையாளர்கள் சம்பாத்தித்து விட்டதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. வாரிசு திரைப்படம், விஜய் படம் என்பதாலும், வம்சி பைடப்பள்ளி இதற்கு முன்னர் எடுத்த படங்களில் ரசிகர்களை ஏமாற்றியதில்லை என்பதாலும் இந்த அளவிற்கு லாபம் பார்த்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.


வைரலான வாரிசு லீக்ஸ்:


 ஷூட்டிங் ஆரம்பித்த நாளிலிருந்தே வாரிசு திரைப்படத்தின் போட்டோக்களும் காட்சிகளும் அவ்வப்போது இணைதளங்களில் வைரலானது. ராஷ்மிகாவுடன் காதல் பாடலுக்கு விஜய் நடனமாடும் காட்சிகளும், நடிகர் பிரபுவுடன் விஜய் மருத்துவமனையில் இருக்கும் காட்சியும் வெளியாகி விஜய் ரசிகர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, படப்பிடிப்பு தளங்களில் ஸ்ட்ரிட் ஆர்டர் போடப்பட்டதால் எந்த காட்சிகளும் அதையடுத்து வெளியாகவில்லை.  இதையடுத்து, வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலும் சமீபத்தில் வெளியானது. ஆரம்பத்தில் இப்பாடலை “மொச்சக் கொட்ட பல்லழகி பாட்டு மாதிரி இருக்கு” என கலாய்த்த ரசிகர்கள், இப்போது அதை ரிபீட் மோடில் கேட்டு வருகின்றனர். 




ஹைதராபாத்தில் க்ளைமேக்ஸ்!


வாரிசு படத்தின் அப்டேட்டுகளை அடிக்கடி பறக்கவிடும் படக்குழு, தற்போது இன்னொரு அப்டேட்டையும் விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலின் படப்பிடிப்பை முடித்த பிறகு, படக்குழுவினர் க்ளைமேக்ஸை படம்பிடிப்பதற்காக ஹைதராபாத்திற்கு செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கில், படத்தின் நாயகியான ராஷ்மிகாவும் இடம்பெற்றுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ளைமேக்ஸ் சீக்குவன்ஸ் முழுவதுமே எமோஷன் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்ததாக கூறப்படுகிறது. மொத்த படப்பிடிப்பும் டிசம்பர் 5ம் தேதி முடிக்கப்படவுள்ளதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் அனைவரும் இன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்