Varisu Audio Launch LIVE: நம்மை எதிர்க்கிறார்களா? அப்ப சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம். - விஜய் பேச்சு
என் நெஞ்சில் குடி இருக்கும் என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. சற்று நேரத்தில் துவங்கவிருக்கும் வாரிசு இசை வெளியீட்டு விழா தொடர்பான அப்டேட்களை இங்கு காணலாம்.
தனுஷ்யாLast Updated: 24 Dec 2022 10:44 PM
Background
8 ஆண்டுகளுக்குப் பின் விஜய் - அஜித்தின் படங்கள் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் சினிமா ரசிகர்கள் இப்போதே மோதலுக்கு தயாராகி விட்டார்கள்; அஜித்திற்கு துணிவு படம் வெளியாகவுள்ள நிலையில், விஜய்க்கு வாரிசு படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள...More
8 ஆண்டுகளுக்குப் பின் விஜய் - அஜித்தின் படங்கள் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் சினிமா ரசிகர்கள் இப்போதே மோதலுக்கு தயாராகி விட்டார்கள்; அஜித்திற்கு துணிவு படம் வெளியாகவுள்ள நிலையில், விஜய்க்கு வாரிசு படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார்.மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ வாரிசு தயாரித்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, ஆராரிராரோ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், டிசம்பர் 24 ஆம் தேதியான இன்று ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில் இவ்விழாவுக்கான அனுமதி பாஸ்கள் நேற்று அனைத்து மாவட்ட விஜய் தலைமை மன்ற நிர்வாகிகளிடம் வழங்கப்பட்ட நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்மான சம்பவங்களை நிகழ்த்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக செல்லும் நிலையில் புகைப்படங்களும் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்குப் பின் விஜய் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கப்போவதால் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நேரலை செய்யப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், வாரிசு ஆடியோ நிகழ்ச்சியை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ தொகுத்து வழங்குகிறார்; மேலும் இந்நிகழ்ச்சி புத்தாண்டு சிறப்பாக வரும் ஜனவரி 1 ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, என் நெஞ்சில் குடி இருக்கும் என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இன்று பிரம்மாண்டமாக நடக்கபோகும் வாரிசு இசை வெளியீட்டு விழா தொடர்பான அப்டேட்களை இங்கு காணலாம்.
Varisu Audio Launch : வேறு யாரையும் நீங்கள் போட்டியாளராக பார்க்க வேண்டாம் உங்களுக்கு நீங்களே போட்டியாளர் - விஜய் பேச்சு
எனக்கு போட்டியாக 1992 இல் ஒரு நடிகர் வந்தார்; அவரை ஜெயிக்க வேண்டும் என்று நான் ஓடினேன். ஆனால் அவர் எங்கு சென்றாலும் வந்தார். அவரை ஜெயிக்க வேண்டும் என்று முயற்சித்து முயற்சித்து இந்த இடத்தில் இருக்கிறேன். அந்த நடிகர் பேர் ஜோசப் விஜய்.. ஆம் அது நான்தான்
வேறு யாரையும் நீங்கள் போட்டியாளராக பார்க்க வேண்டாம் உங்களுக்கு நீங்களே போட்டியாளர் - விஜய் பேச்சு
Varisu audio Launch LIVE: நான் சாப்பிடப்போவதில்லை.. அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்... மேடையில் கண்கலங்கிய தமன்!
”இசையமைப்பாளர் பார்வையில் சொல்கிறேன். இந்தியாவுக்கு ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமோ, அப்படி ஒரு இசையமைப்பாளருக்கு விஜய்க்கு இசை அமைக்க வேண்டியது முக்கியம்.
நான் இன்று சாப்பிட போவதில்லை...அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன்” எனப் பேசிய இசையமைப்பாளர் தமன் மேடையில் கண்கலங்கினார்
Varisu audio Launch LIVE: கில்லி படம் பாத்ததுல இருந்து விஜய் ரசிகை...ஃபேன் கேர்ளாக மாறிய ராஷ்மிகா!
”நானும் அப்பாவும் கில்லி படம் பார்க்க போனோம்; அதன் பின்னர் தான் நான் விஜய் ரசிகை ஆனேன். எனக்கு பொய் சொல்ல வரல. அதனால் தான் நான் எங்கு சென்றாலும் எனக்கு பிடித்த நடிகர் விஜய் என்று சொல்கிறேன்” - இசை வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா பேச்சு
Varisu audio Launch LIVE: விஜய்யை மேடையில் கட்டிப்பிடித்து முத்தமிட்ட சதீஷ்!
”எனக்காக என்னோட குடும்பம், நண்பர்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால் அது ரத்த சம்பந்தம்; ஆனால் எந்தவித தொடர்பும் இல்லாமல் ரசிகர்கள் வைக்கும் அன்பு பெரியது என்று விஜய் சொல்வார்; விஜய் 3 தலைமுறைகளை கட்டிப்போட்டு இருக்கிறார்” எனப் பேசிய நடிகர் சதீஷ் விஜய்யை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.
Varisu audio Launch LIVE: விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார்னு சூர்ய வம்சம் வெற்றி விழாவில் சொன்னேன்... நினைவுகூர்ந்த சரத்குமார்!
”சூரிய வம்சத்தின் வெற்றி நிகழ்வில் கருணாநிதி பங்கேற்றார். அப்போது நான் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னேன். அது இன்று நிஜமாகி இருக்கிறது” - இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத் குமார் பேச்சு.
”படத்தின் கிளைமேக்சில் ஒரு காட்சியில் விஜய் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார். நான் மனதார நிஜமாக சொல்கிறேன், நானும் விஜய் ரசிகனாக மாறி விட்டேன்” என பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.
Varisu audio Launch LIVE: விஜய்யின் வயதை விட அவர் அழகு ஏறிக்கொண்டு இருக்கிறது.. நடிகர் ஷ்யாம் கலகல பேச்சு!
”வாரிசு படத்தில் நான்தான் சின்ன பையன்; ஆனால் என்னை விட விஜய் சின்ன பையன்; அவர் வயதை விட அவரின் அழகு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது” - நடிகர் ஷ்யாம்
Varisu audio Launch LIVE:விஜய் போன்ற ஒரு எண்டர்டைனரை இந்தியா பார்த்ததில்லை... பாடலாசிரியர் விவேக்!
”படப்பிடிப்பில் அரசனாகவும், தளபதியாகவும் இல்லாமல் எங்களிடம் விஜய் ஒரு மனிதனாக நடந்து கொண்டார். இந்தியா விஜய் போன்று ஒரு entertainerஐ பார்த்ததில்லை” - பாடலாசிரியர் விவேக்
Varisu audio Launch LIVE: விழாவை தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ராஜூ - தொகுப்பாளினி ரம்யா
இசை வெளியீட்டு விழாவை பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர், விஜய் டிவி தொகுப்பாளர் ராஜூ மற்றும் பிரபல தொகுப்பாளினி ரம்யா இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.
நடன இயக்குநர் ஜானி - ராஷ்மிகா இருவரும் இணைந்து ரஞ்சிதமே பாடலுக்கு அரங்கம் அதிர நடனமாடினர். ”பாடலின் கடைசி 1.20 நிமிடங்களில் ஒரே ஷாட்டில் விஜய் நடனமாடி இருக்கிறார்; அது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்” என ஜானி தெரிவித்துள்ளார்.
Varisu audio Launch LIVE:மாண்புமிகு மாணவன் முதல் விஜய்யுடன் 19 ஆண்டு பயணம்... ஷோபி மாஸ்டர் நெகிழ்ச்சி!
”மாண்புமிகு மாணவன் படத்தில் எனக்கும் விஜய்க்குமான பயணம் தொடங்கியது; அதன் பின்னர் திருப்பாச்சி படத்தில் இணைந்தோம். தொடர்ந்து 19 ஆண்டுகளாக பணியாற்றி இருக்கிறோம்” என நடன இயக்குநர் ஷோபி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
வாரிசு படத்தில் இரண்டு பாடல்களுக்கு ஷோபி நடனம் அமைத்துள்ளார். ”பாப்பா பாப்பா பாடல் மற்றும் தீம் இசைக்கு நான் நடனம் அமைத்துள்ளேன்” என இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஷோபி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
Varisu audio Launch LIVE: நான் படம் பாத்துட்டேன்... ஒரே goosebumps தான்... எடிட்டர் பிரவீன் மகிழ்ச்சி!
இசை வெளியீட்டு விழாவில் பேசிய எடிட்டர் பிரவீன், ”எல்லாரும் படம் பார்ப்பதற்கு முன்னர் நான்தான் படம் பார்த்திருக்கிறேன். படம் அற்புதமாக வந்திருக்கிறது. படம் முழுக்க கூஸ் பம்ப்ஸ் தருணங்களாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Varisu audio Launch LIVE : தளபதி..தளபதி...ஆர்ப்பரித்த ரசிகர்கள்..வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் ருசிகரம்..!
வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் விஜய் நடித்த படங்களின் பாடல்கள் ஒலிபரப்படுகின்றன.இதனை ரசிகர்களும் இணைந்து பாடி வருவதால் விழா நடைபெறும் அரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
Varisu audio launch LIVE : வாரிசு படத்தில் இருந்து இதுவரை வெளிவராத பாடல்கள்
இதுவரை வாரிசு படத்திலிருந்து ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’, ‘சோல் ஆஃப் வாரிசு’ ஆகிய மூன்று பாடல்கள் வந்த வெளியாகியுள்ளது. இதைத்தவிர்த்து அனிருத் பாடிய ’பாஸ் ரிட்டர்ன்ஸ்’, சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிடா காந்தி பாடிய ’கடிதங்கள் வரைந்தாய்’, ஆல்தோட்ட பூபதியின் ரீமேக்கான ’பூங்கொடி பூபதி’ ஆகிய பாடல்கள் வெளியாகவுள்ளது.
Varisu audio launch LIVE : நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அலைமோதும் கூட்டம்
இன்று நடக்கும் நிகழ்ச்சியில், நடிகர் விஜயை நேரில் சந்திக்க அவரின் ரசிகர்கள் பலர் ஆர்வமாக உள்ளனர். அதனால், நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் வாசலில் பெரும் கூட்டம் காணப்படுகிறது.
Varisu audio launch LIVE : டிக்கெட்களுடன் ஆர்வமாகவுள்ள ரசிகர்கள்!
இன்று நடக்கும் நிகழ்ச்சியில், நடிகர் விஜயை நேரில் சந்திக்க அவரின் ரசிகர்கள் பலர் ஆர்வமாக உள்ளனர். டிக்கெட்டின் புகைப்படங்களை ஷேர் செய்து தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Varisu audio launch LIVE : வைரலாகும் ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற ஹாஷ்டாக்!
இன்று நடக்கபோகும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவுள்ளார். இம்முறை அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதனால், ’என் நெஞ்சில் குடியிருக்கும்' என்ற ஹாஷ்டாக் வைரலாகி வருகிறது.
Varisu audio launch LIVE : ஜனவரி 1 ஆம் தேதியன்று ஒளிபரப்பாகும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா!
இன்று நடக்கவிருக்கும் நிகழ்ச்சி நேரலை செய்யப்படாது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா புத்தாண்டு சிறப்பாக வரும் ஜனவரி 1 ஆம் தேதியன்று பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Varisu audio launch LIVE : இன்று நடக்கவிருக்கும் இசை வெளியீட்டு விழா!
வாரிசு படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியான நிலையில், டிசம்பர் 24 ஆம் தேதியான இன்று ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
Varisu audio launch LIVE : பொங்கலுக்கு நிச்சயமாக வாரிசு ரிலீஸாகும்!
வாரிசு படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை வாங்கிய செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ், இப்படம் 2023 ஆம் ஆண்டின் பொங்கலுக்கு நிச்சயமாக வெளியாகும் என்று அறிவித்தது. அதனையொட்டி போஸ்டர் அடித்து ஒட்டும் வீடியோவை அவர்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டனர்.
Varisu audio launch LIVE : செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸிடம் உரிமையை வாங்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்!
வாரிசு படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் வாங்க, அவர்களிடம் இருந்து சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் கோவை ஆகிய பகுதிகளுக்கான திரையரங்கு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியது.
Varisu audio launch LIVE : ரஞ்சிதமே பாடலுக்கு பிறகு வந்த தீ தளபதி பாடல்!
விஜயின் 30 ஆண்டு கால சினிமா வாழ்க்கையையொட்டி தீ தளபதி என்ற பாடல் விஜய்க்கு சம்ர்பிக்கப்பட்டது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார். அத்துடன் அந்த வீடியோவிலும் சிம்பு நடனம் ஆடியிருந்தார். அது நல்ல வரவேற்ப்பை பெற்றது.
Varisu audio launch LIVE : லீக்கான வாரிசு படக்குழுவின் போட்டோஸ்!
சென்னையில, வாரிசு படப்பிடிப்பு நடந்த போது ரசிகர்கள் பலர் அந்த இடத்திற்கு சென்று, அங்கு நடந்த படப்பிடிப்பு காட்சிகளை ஷூட் செய்து இணையத்தில் வெளியிட்டனர்.
Varisu audio launch LIVE : வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
நடிகர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதியன்று, வாரிசு படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதன் பிறகு இரண்டாவது போஸ்டரும் மூன்றாவது போஸ்டரும் வெளியானது.
Varisu audio launch LIVE : தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி சேர்ந்த விஜய்!
2021 ஆம் ஆண்டு மாஸ்டர் படம் வெளியாக, பீஸ்ட் படப்பிடிப்பில் பிசியானார் விஜய். அதைத்தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் வம்சியுடன் விஜய் கைக்கோர்க்க உள்ளார் என்ற தகவல் வந்தது. அதற்கேற்றவாரு வம்சி வாரிசு படத்தை இயக்கியுள்ளார்.