வாரிசு ஆடியோ விழாவில் மைக் சரியாக வேலை செய்யாததால் நடிகர் விஜய் டென்ஷன் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. 


வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.  விழாவுக்கு கிரே நிற சட்டை, வெள்ளை பேண்ட் சகிதம் முன்னதாக அரங்கம் அதிர விஜய் மாஸ் எண்ட்ரி கொடுத்தார்.  ரசிகர்கள் அருகின் விஜய்யை பார்க்கும் வகையில் தனி பாதை அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் நடந்து சென்று விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.


அவர் வரும் போது பின்னணியில் வாரிசு படத்தில் இடம் பெற்ற தீ தளபதி பாடல் ஒலிபரப்பப்பட்டது.  விஜய் வருகை தந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்தநிலையில், வாரிசு ஆடியோ விழாவில் மைக் சரியாக வேலை செய்யாததால் நடிகர் விஜய் டென்ஷன் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. 


டென்ஷனான விஜய்!


ரஞ்சிதம் பாடல் பாடி முடித்த பின்னர் பாடகி மானசி, விஜய்க்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பேசி கொண்டிருந்தார். அப்போது அவர் பேசிய மைக் சரியாக வேலை செய்ய வில்லை... இதை பார்த்து கொண்டிருந்த விஜய் ஒரு கட்டத்தில்  கோபமடைந்து, சீட்டை விட்டு எழுந்து மேடையின் அருகில் வந்து ஒழுங்கான மைக்கை கொடுக்குமாறு சத்தமிட்டு, தானே மைக்கை வாங்கி, மானசியிடம் கொடுத்தார். அதை வாங்கி கொண்ட மானசி நடிகருக்கு விஜய்க்கு நன்றி கூறி வாங்கி கொண்டார். அதை பார்த்த விஜய் ரசிகர்கள் நேரு உள்விளையாட்டு அரங்க அதிர ஆர்ப்பரித்தனர். இருப்பினும், அந்த மைக்கும் சரியாக வேலை செய்யவில்லை. 


ஆடியோ வெளியீட்டு விழாவில் ஆரம்பத்தில் இருந்தே  ஆடியோ பிரச்னை இருந்தது குறிப்பிடத்தக்கது. 


ஜானி மாஸ்டர்- ரஷ்மிகா நடனம்:


மேலும் விழாவில் நடன இயக்குநர் ஜானி  - ராஷ்மிகா இருவரும் இணைந்து ரஞ்சிதமே பாடலுக்கு அரங்கம் அதிர நடனமாடினர்.






”பாடலின் கடைசி 1.20 நிமிடங்களில் ஒரே ஷாட்டில் விஜய் நடனமாடி இருக்கிறார்; அது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்” என ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.