Vanniyars Boycott Rajinikanth: ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேலு இயக்கும் தலைவர் 170வது படத்தில்(Thalaivar 170) ரஜினி நடிக்க இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னியர் சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது.  


2021ம் ஆண்டு நவம்பரில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ஜெய்பீம். 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒடுக்கட்டப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட சாதி வன்மத்தை கூறும் ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதி கேட்டு குரல்கொடுக்கும் சூர்யாவின் நடிப்பு பலரையும் பாராட்ட வைத்தது. இதற்கெல்லாம் மேலாக தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்காக வாதாடிய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் கேரக்டராக சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம்  பல்வேறு விருதுகளை வென்றது. 


அதேநேரம்  ஜெய்பீம் படத்தில் குறிப்பிட்ட சமூக மக்களின் மனதை புண்படுத்தும் விதமாகவும், வெறுப்பை தூண்டும் விதமாகவும் படத்தில் சில காட்சிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குறிப்பிட்ட சமூகத்தை சுட்டிக்காட்டவே படத்தில் அக்னி குண்டமும், மகாலட்சுமி புகைப்படமும் இடம்பெற்றதாக கூறி சூர்யா மற்றும் ஞானவேல் ராஜா உள்ளிட்டோருக்கு எதிராக ருத்ர வன்னியர் சேனா அமைப்பினர், நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் காரணமாக படத்தில் இடம்பெற்றிருந்த அக்னி குண்டம் காட்சி நீக்கப்பட்டது. சமீபத்தில் குறவர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் நோக்கத்தில் ஜெய்பீம் படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி, அளிக்கப்பட்ட புகாரில் சூர்யா பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 


ALSO READ: 800 Movie Review: முரளிதரனின் வாழ்க்கை வரலாறு! 800 படத்தில் கறைந்தது ரசிகர்களின் மனமா..? பணமா..? ஒரு டி20 விமர்சனம்!


இந்தநிலையில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தி ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் ரஜினி நடிப்பதாக கூறி வன்னியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்து. தலைவர் 170 படப்பிடிப்பு தொடங்கிய இடுக்கும் சூழலில் ஞானவேல் ராஜா இயக்கதில் ரஜினி நடிக்க கூடாது என புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினி நடித்தால், பாபா படத்தை விட பத்து மடங்கு பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்றும் வன்னியர் சங்கத்தினர் கூறி வருகின்றனர்.  அத்துடன் இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தை நிரந்தரமாக மூட வைத்து விடுவோம் என்று ஒரு பக்கம் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சமூக வலைதளங்களில் வன்னியர் பாய்காட் ரஜினிகாந்த், வன்னியர் பாய்காட் ஞானவேல், வன்னியர் பாய்காட்லைக்கா என்று ஹேஷ்டேக்  வைரலாக்கப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க: 


Raththam Movie Review: விஜய் ஆண்டனியின் சைலண்ட் ட்ரீட்மென்ட்.. ரத்தம் படம் விமர்சனம் இதோ..!