தமிழகத்தின் சமூகநீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் வன்னி அரசு. அந்த சந்திப்பின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்தது. 'நிறைய மக்களுக்கு செய்யுங்கள்... வாழ்த்துகள்' என்று அவர் வாழ்த்தி அனுப்பினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement

தமிழக அமைச்சரவையில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதித்துறை அமைச்சராக வன்னி அரசு கடந்த மே மாதம் பொறுப்பேற்றார். அவரிடம் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சமூகநீதிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டதும், அதற்கு முதல் அமைச்சராக வன்னி அரசு நியமிக்கப்பட்டதும் முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்பட்டது.

Continues below advertisement

பொறுப்பேற்ற பிறகு, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி, நிலுவையில் இருந்த கோப்புகளை ஆய்வு செய்து, சமூகநீதி சார்ந்த திட்டங்களை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, குடியிருப்பு, நலத்திட்டங்கள், சமூக உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் துறையினருடன் தொடர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமல்லாமல், ஒதுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக கேட்டு நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையையும் வன்னி அரசு கடைப்பிடித்து வருகிறார். அண்மையில் மேய்ச்சல் சமூகங்களின் வன மேய்ச்சல் உரிமைகள் தொடர்பான மனுவையும் அவர் பெற்றுக் கொண்டு, அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.