வனிதா என்றாலே கூடவே சர்ச்சையும் ஒட்டிக்கொண்டு வரும் அடைமொழி போல். எப்போதும் சர்ச்சைகளால் திரை வெளிச்சத்தில் இருந்து கொண்டே இருக்கிறார் வனிதா விஜயகுமார்.


அப்படிப்பட்ட வனிதாவின் சர்ச்சைப் பட்டியலில்  லேட்டஸ்டாக இணைந்துள்ளார் நடிகர் நகுல்.
விஜய் டிவியில் சீரியல்களை விட ரியாலிட்டி நிகழ்ச்சிகள்தான் அதிகளவில் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. குக்வித் கோமாளி, சூப்பர் சிங்கர், பிக்பாஸ், மிஸ்டர் அன்ட் மிஸ்சஸ் சின்னத்திரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் இடத்தில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. அந்த வரிசையில் பிக்பாஸ் அனைத்துச் சீசன்களிலும் கலந்து கொண்டவர்கள் மட்டும் பங்கேற்கும் பிக்பாஸ் ஜோடி தற்பொழுது ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு நடுவராக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகிய இருவரும் உள்ளனர். 




இந்த நிகழ்ச்சியில் வனிதாவுக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் நடந்த லடாய் ஊர் அறிந்த விஷயம். இந்நிலையில், காளி வேஷம் போட்ட வனிதாவுக்கு 10க்கு 1 மதிப்பெண் மட்டுமே கொடுத்து ரம்யா கிருஷ்ணன் அவமானப்படுத்திவிட்டதாக வனிதா கூறினார். "பணிசெய்யும் இடத்தில் முறையற்ற நடத்தையை ஒருபோதும் ஏற்க முடியாது. நான் ஒரு மோசமான நபரால் துன்புறுத்தப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன், மோசமாக நடத்தப்பட்டேன். அவருக்கு திமிர் அதிகம். பணியிடத்தில் பெண்களை ஆண்கள் மட்டும் மோசமாக நடத்துவதில்லை, பெண்களே பெண்களை அதை விட மோசமாக நடத்துகின்றனர். அதனால் தான் நிகழ்ச்சியிலிருந்து விலகினேன்" என மிக நீண்ட விளக்கமொன்று அளித்திருந்தார். 
பதிலுக்கு ரம்யா கிருஷ்ணனோ, போட்டியில் நான் 10க்கு ஒரு மதிப்பெண் கொடுத்ததெல்லாம்  ஒரு காரணம் எனக் கூறுகிறார்கள். இதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது. மற்றபடி அவர் ஏன் விலகினார் என்று அவரிடமே கேளுங்கள் என்று கூறினார்.


இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்னொரு நடுவரான நடிகர் நகுல் இது குறித்து கருத்து கூறிய போது "வனிதா மீதுதான் தவறு. ரம்யா கிருஷ்ணனிடம் வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.


இதற்கு பதிலடி கொடுத்துள்ள வனிதா "நான் என் வாழ்க்கையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறேன். சில வேலை இல்லாத முட்டாள்களை (இடியட்களை) கண்டுகொள்ள எனக்கு நேரமில்லை. படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது என்பதற்கும், அதன் பின் மீண்டும் படப்பிடிப்பு செய்து எடிட் செய்து வெளியிட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது.


எனக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் அந்தத் தொடரில் இருந்து நான் விலகினேன். எனக்கு ஒருவருடன் பிரச்சினை இருக்கிறது என்றால் எங்களுக்குள் ஏற்கெனவே பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். அதை எல்லாம் கருத்தில் கொண்டே சர்ச்சையில் சம்பந்தப்பட்ட நாங்கள் இருவரும் வாயை மூடிக் கொண்டிருக்கிறோம். அதனால், மற்றவர்கள் அதைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது" என்று தெரிவித்திருக்கிறார்.