ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கடைசி தோட்டா’.


இந்தப் படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் அதிரடியான காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ராதாரவி, ஸ்ரீகுமார், வையாபுரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.


‘மர்டர் மிஸ்டரி’ வகையில் விறுவிறுப்பான திரைப்படமாக உருவாகும் இப்படத்தில், அதிரடியான காவல்துறை அதிகாரியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் புகை பிடித்தபடி மிரட்டலான மற்றும் மிடுக்கான காவல்துறை அதிகாரியாக வனிதா அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.


கடைசி தோட்டா திரைப்படம்


வனிதா விஜயகுமார் உடன் கடைசி தோட்டா படத்தில் ராதாரவி முக்கியமான வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். அவரது வேடமும் பேசப்படும் விதத்தில் அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 


வி.ஆர்.சுவாமிநாதன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.


சீட் நுனியில் பார்வையாளர்களை உட்கார வைக்கும் மர்டர் மிஸ்டரி திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.


இயக்குநர் வசந்த பாலனின் அநீதி படத்தில் நடித்துள்ள வனிதா முன்னதாக இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “வசந்த பாலன் அவர்களுக்கு நன்றி. திரைத்துறையின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளிகூட கர்வம் இல்லை. எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார். அர்ஜூன் தாஸூக்கே நான் வில்லன், அவர் க்யூட்டெஸ்ட் பெர்சன். அவரோட வாய்ஸ் அருமையாக உள்ளது.


கிளைமேக்ஸ் காட்சியை பார்த்து விட்டு, எனக்கு ஷாரூக்கான் தான் நியாபகம் வந்தார். அர்ஜூன் தாஸ் தமிழ் சினிமாவின் ஷாரூக்கான்.   மிகைப்படுத்துவதற்காக நான் இதைக் கூறவில்லை” எனப் பேசினார். வனிதாவின் இந்தப் பேச்சு இணையத்தில் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளியது. தற்போது வனிதா விஜயகுமார் கோலிவுட்டில் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.