அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாக உள்ளது. U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் வலிமை திரைப்படம் 2:58 மணி நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வந்திருக்கிறது.  ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் இத்திரைப்படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.


இறுதியாக, இரண்டரை காத்திருப்பு முடிவுக்கு வருகிறது.  ‘வலிமை’ முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் டிக்கெட்டை புக் செய்து வருகின்றனர். திருநெல்வேலியில் உள்ளது மிகவும் பிரபலாமன தியேட்டர் ராம் முத்துராம் சினிமாஸ். இங்கு முன்னணி நடிகர்கள் படம் வெளியாகும்போது திருவிழா போல் இருக்கும். 


இந்த நிலையில்,  ‘வலிமை’ பட டிக்கெட்டுகளை எடுக்க ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முன்பதிவு தொடங்க இன்னும் 10 நிமிடங்கள் உள்ள நிலையில் வலிமை டிக்கெட்டுகளை எடுக்க எங்கள் இடத்தில் அஜித்தின் தீவிர ரசிகர்கள் வரிசையில் நிற்கின்றனர் என்று தியேட்டர் நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


வீடியோ:


 






சென்னையைப் பொறுத்தவரை பிப்ரவரி 23 முதல் மார்ச் 3-ம் தேதி வரையிலா காட்சிகளுக்கு, காசி, தேவி, கசினோ உள்ளிட்ட திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும், முன்பதிவு தொடங்கிய சில நேரத்தில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதனால் வலிமை பட முதல் நாள் காட்சிக்கான கவுண்டவுன் ஆரம்பாகி உள்ளது. நேர்கொண்ட பார்வையில் இணைந்த அஜித், வினோத் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது. ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


 படம் ரிலீசுக்கான தேதி நெருங்கிவிட்ட நிலையில் ப்ரோமோக்களை அள்ளித்தூவி வருகிறது தயாரிப்பு நிறுவனம். சமீபத்தில் வெளியான 'நாங்க வேற மாறி' பாடல் க்ளிப் இணையத்தில் வைரலானது. அப்பாடலில் அதிகம் வைரலான தகதகனு மின்னலாம் வரிக்கான அஜித்தின் டான்சே ப்ரோமோவாக வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண