இன்று உலகெங்கிலும் காதலர் தினம் மிகவும் உற்சாகத்தோடும் அன்போடும் கொண்டாடப்பட்டு வருகிறது. காதல் எந்த எல்லையும் இல்லை தடையும் இல்லை. உலகெங்கிலும் காதல் கொண்டாடப்பட்டு வரும் இந்த நாளில் நமது கோலிவுட் சினிமா நட்சத்திரங்களின் காதலர் தின ஸ்பெஷல் போஸ்ட்கள் மூலம் அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 



இயக்குனர் விக்னேஷ் சிவன் :


'அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்,காதல் தான் வாழ்க்கையை முழுமையாக்கிறது' என நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


நடிகை சினேகா :


' Dont fall in love, rise in love ' என பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் 


நடிகர் பிரசன்னா :


அவள் என்னவள் மட்டுமல்ல. அவள் என்னுடையவள், என் வீடு, என் இதயம், என் ஆன்மா மற்ற அனைத்தும் அவளே. இந்த 15 வருட ஒற்றுமை  மட்டுமின்றி இன்னும் பல ஆண்டுகள் இது நீடிக்கும். காதலர் தின வாழ்த்துக்கள் !!!






நடிகர் கமல்ஹாசன் :


சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்து நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்.


கவிஞர் வைரமுத்து :


ஏராளமான காதல் பாடல்கள் மூலம் நமது இதயங்களை கனிய வைத்த கவிஞர் வைரமுத்து தனது காதலர் தின வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் : 


எந்த நிலையிலும் வரலாம்
எந்த வயதிலும் வரலாம்


அது ஒன்றல்ல
ஒன்றிரண்டு மூன்று 
நான்கென்று
எண்ணிக்கை ஏறலாம்


ஆனால்,
என்னதான் அது என்ற
இருதயத் துடிப்புக்கும்,
எப்போதுதான் நேரும் என்ற
உடலின் தவிப்புக்கும்
இடைவெளியில் நேருகின்ற
துன்பம் குழைத்த
இன்பம்தான் காதல்


அந்த
முதல் அனுபவம் வாழ்க


நடிகர் சாய் தரம் தேஜ் :


நம் வாழ்வில் மிக முக்கியமான அன்பைக் கொண்டாடுவது எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன் - நமது தனித்துவத்தையும் குறைபாடுகளோடும் நாம் எப்படி இருக்குமோ அப்படியே நம்மை நாமே காதலிப்போம். 


நடிகர் மாதவன் :


'என நிரந்தர காதலிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!!!' என தனது மனைவியின் புகைப்படத்துடன் போஸ்ட் செய்துள்ளார் மாதவன் 


நடிகை சுனைனா :


‘நாம் அன்பு செய்ய பிறந்தவர்கள்,வெறுப்பதற்கு அல்ல’ அனைவருக்கும்   காதலர் தின வாழ்த்துக்கள் 


நடிகை க்ரித்தி ஷெட்டி :


'இந்த வாழ்க்கையில் நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் தான் ஒரே ஒரு மகிழ்ச்சி’ காதலர் தின வாழ்த்துக்கள் 


 






நடிகர் அமீர் :


' காதல் எங்குள்ளதோ அங்கே தான் வாழ்க்கை உள்ளது ' 


நடிகர் காளிதாஸ் ஜெயராமன் :


"இறுதியாக இந்த காதலர் தினத்திற்கு நான் சிங்கிளாக இல்லை... காதலர் தின வாழ்த்துக்கள்!!!"