Valentine's Day special | ‛ராமராஜனை கல்யாணம் பண்ணப் போறேன்னு சொன்னேன்... விளக்குமாறு அடி கிடைத்தது’ காதலை பகிரும் நடிகை நளினி!

‛இந்த வயசுல காதலா.. செத்துப்போ...’ என அடித்து எடுத்துவிட்டார்கள். அதுக்கு அப்புறம் தான் அவர் மீது அதிக ஈர்ப்பு வந்தது.

Continues below advertisement

நடிகர் ராமராஜனின் புகழும், பெயரும் இப்போது இருப்பவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களுக்கு சவால் விட்ட நடிகர். தொட்டதெல்லாம் ஹிட் என வாழ்ந்தவர். நடிகை நளினியை காதல் திருமணம் செய்த அவர், பின்னாளில் அவரை பிரிந்தார். அவர்களது காதல் எப்படி சேர்ந்தது, எவ்வாறு நடந்தது, எவ்வாறு பிரிந்துது, பேட்டி ஒன்றில் நடிகை நளினி தெரிவித்துள்ளார். இதோ அந்த பேட்டி...

Continues below advertisement


 

‛‛18 படங்கள் உதவி இயக்குனராக இருந்தார். குங்குமம் வைக்கும் சீன், இப்படி தான் வைக்க வேண்டும் என அவர் குங்குமம் வைத்தார். அப்போதே அவருக்கு தேவதைகள் பறந்திருக்கிறார்கள். எனக்கு லவ் லெட்டர் கொடுத்தார். எனக்கு ஒரே ஆச்சரியம். நமக்காக லெட்டர் கொடுத்ததும், அதை பெரிதாக நினைத்தேன். அதை உடனே ஏற்றுக் கொண்டேன். எனக்கு நடிக்க வேண்டும் என்கிற ஆசையே இல்லை. சின்ன படங்கள் நடித்தால், வெளியேற்றப்படுவோம் என்று நினைத்தேன், ஆனால், அது எல்லாமே ஹிட்டாகிக் கொண்டே இருந்தது. எனக்கு சினிமாவை விட, நல்ல குடும்பத்தலைவியாக இருக்க வேண்டும்  என்பது தான் ஆசையாக இருந்தது. 

ராமராஜனை திருமணம் செய்யப் போகிறேன் என்று வீட்டில் கூறியதும், விளக்குமாறு அடி தான் எனக்கு கிடைத்தது. ‛இந்த வயசுல காதலா.. செத்துப்போ...’ என அடித்து எடுத்துவிட்டார்கள். அதுக்கு அப்புறம் தான் அவர் மீது அதிக ஈர்ப்பு வந்தது. இவங்க நம்மை நடிக்க வெச்சிட்டே இருப்பாங்க போல... கல்யாணம் பண்ணி வைக்கமாட்டாங்க போல... என முடிவு செய்து, அவரை திருமணம் செய்ய முடிவு செய்தேன். அவரும் என்னை திருமணம் செய்ய காத்திருந்தார்.

ராமராஜன், நன்றாக ஜோதிடம் பார்ப்பார். கல்யாணம் ஆகி 4 ஆண்டுகளில் அவர் பெண்ணும், பையனும் பிறந்தா நாம சேர்ந்திருக்க மாட்டோம். அவங்களை ஹாஸ்டலில் சேர்த்துவிடுவோம். நாம தனியா இருப்போம். இல்லையென்றால், போக போக என்னோடு புகழ் போயிடும் என்று அவரே கணித்தார். 

அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க...என்று நான் தான் சமரசம் செய்தேன். இல்லம்மா... நம்ம ஜாதகம் அப்படி தான் இருக்கு, என்றார். ஒரு கட்டத்தில், நான் வேண்டுமா, குழந்தைகள் வேண்டுமா எனக்கேட்டார். எனக்கு குழந்தைகள் தான் வேண்டும் என்று கூறி பிரிந்து விட்டோம். ஆனால், எங்கள் பிரிவை அவர் முன்பே கணித்து வைத்திருந்தார். அவர் கூறியது தான் நடந்தது,’’ என்றார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement
Sponsored Links by Taboola