தமிழ் சினிமாவின் ஆணிவேராக இருந்து வரும் கவிப்பேரரசு வைரமுத்து ரசிகர்களை ஆக்கிரமிக்க தொடங்கியது 1980 ஆம் ஆண்டு. இந்த 40 ஆண்டுகளை திரைவாழ்க்கையில் அவரின் சாதனைகள் பல. சுமார் 7500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களுக்கு தனது வார்த்தைகளால் உயிர் கொடுத்த அவர் குவித்த விருதுவிருதுகள் ஏராளம்; அதில் 7 தேசிய விருதுகளும் அடங்கும். 


 



 


சோசியல் மீடியாவில் ஐக்கியமான வைரமுத்து :


கவிப்பேரரசு வைரமுத்து சமீப காலமாக  சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது சமூகம் சார்ந்த நிகழ்வுகள், சினிமா பற்றிய பரிந்துரைகள் மற்றும் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் தனக்கு பிடித்தமான திரைப்படங்கள் பற்றியும் சமீபத்தில் பகிர்ந்து இருந்தார். இது போன்ற பதிவுகள் கவிஞர் வைரமுத்துவின் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது.


பேத்தியின் மதிப்பெண்ணை பகிர்ந்த கவிஞர் :


இந்த வரிசையில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போஸ்ட் தனது குடும்ப சந்ததி சார்ந்தது. அவரின் பேத்தி மெட்டூரி தமிழ் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் பற்றி அழகான ஒரு குறிப்பை வைரமுத்து பதிவிட்டுள்ளார். வைரமுத்துவின் பேத்தி மெட்டூரி தமிழ் தேர்வில் 97.3 விழுக்காடு பெற்று முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.


அந்த விடைத்தாளை தாத்தா வைரமுத்துவிடம் காட்டியுள்ளார். அதற்கு கவிஞர் வைரமுத்து பேத்தியை பாராட்டியதோடு, உனது வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல சொல்லியிருக்கிறார். இதை மிகவும் அழகாக ஒரு கவிதையாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 


 






 


வைரமுத்து வீட்டில் ரெடியான அடுத்த வாரிசு :


தமிழே மூச்சாக வாழும் கவிஞர் வைரமுத்துவின் வீட்டில் அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது தமிழ் மீதுள்ள பற்று. இதை தான் அவர் ஒவ்வொரு வீட்டிலும் எதிர்பார்க்கிறார் என்பதை தனது ட்வீட் மூலம் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த போஸ்டிற்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.