கவிஞர் வைரமுத்துவின் எழுதிய 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் இன்று வெளியிடப்பட்டது. 



மொழிபெயர்க்கப்படும் கள்ளிக்காட்டு இதிகாசம் :


கவிஞர் வைரமுத்துவின் படைப்பான 'கள்ளிக்காட்டு இதிகாசம்' சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு நாவலாகும். இந்த நாவல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறது சாகித்ய அகாடமி நிறுவனம். இதனை தொடர்ந்து உலக மொழியான ஆங்கிலத்திலும் 'தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதை கீதா சுப்ரமணியம் மொழிபெயர்த்துள்ளார். இந்த ஆங்கில பதிப்பு நூல் வெளியீட்டு விழா துபாயில் இன்று நடைபெற்றது. 


 



'ரைஸ்' மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பங்கேற்பு :


துபாய் அட்லாண்டிஸ் ஹோட்டலில் இன்று 'ரைஸ்' மாநாடு நடைபெற்றது. உலக தொழில் முனைவோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ எனும் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. கவிஞர் வைரமுத்து இந்த விழாவில் பங்கேற்று இந்த நூலை வெளியிட அதனை 32 நாடுகளின் பிரதிநிதிகளும் பெற்றுக்கொண்டனர். இந்த பெருமைக்குரிய செய்தியை தனது ட்விட்டர் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து. 


 






 


சமீபத்தில் தான் 'கள்ளிக்காட்டு இதிகாசத்தின்' இந்தி பாதிப்பு வெளியானது. நாட்டின் சிறந்த புத்தகங்களுக்கு வழங்கப்படும் 'ஃபிக்கி' விருதுக்கு இந்த புத்தகம் தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   


உலக மக்கள் அறியட்டும் தமிழ் மண்ணின் பெருமை :


கவிஞர் வைரமுத்துவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இது நமது தமிழ் மொழிக்கு கிடைத்த எத்தனை பெரிய பெருமை. கள்ளிக்காட்டு இதிகாசம் புத்தகம் வெறும் நூல் மட்டும் அல்ல. அது நமது மண்ணின் பெருமை, மக்களின் கலாச்சாரம். அதை உலகம் முழுவதிலும் இந்த புத்தகம் கொண்டு போய் சேர்க்கும். ஒரு சாமானிய மனிதனின் வாழ்வியலை இந்த உலக நாட்டவர்கள் இந்த படைப்பு மூலம் தெரிந்து கொள்வார்கள். கவிஞர் வைரமுத்துவின் மற்ற அற்புதமான படைப்புகளும் இது போல மொழிபெயர்க்கப்பட்டு உலகம் மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் விருப்பம்.