தமிழ் திரையுலகினரால் இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இறப்பிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பாரதிராஜாவின் பல படஙகளில் பாடல்களை எழுதியவரும் அவரது நெருங்கிய நண்பருமான வைரமுத்து கவிதை எழுதி தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார். 

Continues below advertisement

பாரதிராஜாவுக்கு வைரமுத்து அஞ்சலி

முதல் மரியாதைக்குஇறுதி மரியாதை         - கவிப்பேரரசு வைரமுத்து

பிதாமகனே போய்விட்டாயா?கிராமத்து ராஜாவே இறந்துபட்டாயா?

Continues below advertisement

எங்கள்மண் வாசனையில் இன்று சாவு மணக்கிறதா?

அடைத்துக் கிடந்ததிரையுலகக் கதவுகளைத்திறந்தவெளிக்குத்திறந்துவிட்டவனே!

ஆகாயத்திற்கு அடுத்துஅதிக நட்சத்திரங்களைஅறிமுகம் செய்தவனே!

என்னையும்சுயமரியாதையோடுசுடரொளி வீசச்செய்தவனே!

உடன்பிறப்பேரத்தத்தின் ரத்தமே என்றதலைவர்களின் மொழிக்கு இணையாகஎன் இனிய தமிழ்மக்களேஎன்ற ரத்தினச் சொற்களுக்குமுத்திரை சேர்த்தவனே!

நீ மாயக்காரன்புழுதியைப் பொன்செய்தாய்

சினிமாவின் நிறம்வெள்ளையென்று இருந்ததைகருப்பென்று மாற்றியகலையாளன் நீ!

இடிந்த சுவர்களும்உடைந்த மனிதர்களும்கிழிந்த வாழ்க்கையும்உன் கலையின் கச்சாப் பொருட்கள்

இந்தக் கரட்டுப்பட்டியைத் தில்லி நகரத்திற்கு கொண்டுசேர்த்தஅல்லிநகரத்து அரசன் நீ

இனி நான் எப்படித்தனியாகத் தேனி போவேன்?

மேற்குத் தொடர்ச்சி மலைஅருவிகளால் அழுதுகொண்டேகேட்குமே…எங்கே பாரதிராஜா?

கத்தாழங்காட்டுக் கரிச்சான் கேட்குமே…எங்கே பாரதிராஜா?

கருவேலமரம் கேட்குமேஎங்கே பாரதிராஜா?

என்ன பதில் சொல்வேன்?எப்படிநான் தனித்திருப்பேன்?

நீ தூரிகைநான் வண்ணம்நான் தூரிகைநீ வண்ணம்

தூரிகை இல்லாமல் வண்ணமும்வண்ணம் இல்லாமல் தூரிகையும்என்னத்துக்காகும்?

நீ அரிவாள்நான் கைப்பிடிநான் அரிவாள்நீ கைப்பிடி

அரிவாள் இல்லாத கைப்பிடியும்கைப்பிடி இல்லாத அரிவாளும்என்னத்துக்காகும்?

என்னை அழவிடுஉடம்பின் உப்பெல்லாம்கண்ணீராய்க் கரையட்டும்

இனி என்ன எழுத?நடிகர் திலகம் போல்நானும் புலம்புகிறேன்

‘பூங்காத்து திரும்புமா?எம் பாட்ட விரும்புமா?பாராட்ட - மடியில் வச்சுத் தாலாட்டஎனக்கொரு தாய்மடி கிடைக்குமா?’

முதல் மரியாதை செய்தவனேஉனக்கென் இறுதி மரியாதை