விருமன் படத்தில் நடித்தது குறித்து நடிகை வடிவுக்கரசி நேர்காணல் ஒன்றில் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். 




தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, நடிகர் சூரி, ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம்  கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. 


இந்த படத்தில் கார்த்தியின் அப்பத்தா கேரக்டரில் பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி நடித்திருந்தார். அவரது நடிப்பு பாராட்டைப் பெற்றுள்ள நிலையில் நேர்காணல் ஒன்றில் விருமன் படத்தில் நடிக்க கிடைக்க வாய்ப்பு குறித்து பல தகவல்களை தெரிவித்துள்ளார். 


கேள்வி: வணக்கம் அம்மா, விருமன் படத்தில் நீங்க கார்த்திக்கு அப்பத்தாவா நடிச்சு இருக்கீங்க அந்த அனுபவம் பற்றியும் கார்த்தி பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கம்மா.


வடிவுக்கரசி: கார்த்தி பத்தி சொல்லனும்னா


ரொம்பவுமே திறமையான பையன், நடிப்புல சிவகுமார் அண்ணனையும் மிஞ்சிடுவாரு,


ஆனால் ஒன்னு மட்டும் நிச்சையம், எல்லா வாரிசுக்கும் இது வந்துராது சிவகுமார் அண்ணன் எப்படி நடிப்பு துறையில் சிறந்து விளங்கினாறோ அதைவிட பல மடங்கு அவங்களோட ரெண்டு பயனும் இருக்காங்க, அது நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனும்னு இல்ல, பாருங்க பெரிய பையன் சூர்யா தேசிய விருது வாங்கிட்டாரு ஆனால் அது அவருக்கு எப்பவோ கிடைக்க வேண்டிய ஆனால் விருது அப்போதான் கிடைச்சிருக்கு. கண்டிப்பா கார்த்திக்கும் தேசிய விருது கிடைக்கணும் அப்படி இல்லன்னா அந்த விருதுக்கே மரியாதை இல்லை என்னா கார்த்தி அவ்வளவு பிரமாதமான நடிகர்.


கேள்வி: நீங்க ரஜினி சார் கூட நிறைய படங்கள் உங்க கேரியர்ல நடிச்சு இருக்கீங்க, இப்படி அவர் கூட நடிச்சதுல முடியாத ஒரு நிகழ்வு நான் எதை சொல்லுவீங்க.




வடிவுக்கரசி: ரஜினி சார் கூட நடிச்சது எல்லாம் ஒரு மறக்க முடியாத நிகழ்வு தான் அதுல ஒன்னும் சொல்லனும்னா, ரஜினி கூட நடிச்சதுல முதல் படம் படிக்காதவன் படத்தில் அண்ணியாக நடிச்சேன் இரண்டாவது படம் வீரா, அதுல அம்மாவா நடித்தேன், மூன்றாவது படம் தான் அருணாச்சலம் அந்தப் பட சூட்டிங்கில் தான் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு நிகழ்வு நடந்துச்சு,


ஒரு 85 வயசு பாட்டி கேரக்டர் அப்போ நான் ரஜினிய பார்த்து"நீ ஒரு அனாதை நாய்" அப்படின்னு சொல்லணும் நான் அந்த டயலாக்கை கேட்டவுடன் ஏன் சார் இப்படி எல்லாம் டயலாக் எழுதறீங்க நான் சென்னை பக்கம் போகணுமா வேண்டாமா அவருடைய ரசிகர்கள் என்ன சும்மா விட மாட்டாங்கன்னு சொன்னேன் அதெல்லாம் ரஜினி ஒன்னும் நினைச்சிக்க மாட்டார் நீங்க பேசுங்க என்று கிரேசி மோகன் சொன்னாங்க.


அதுக்கப்புறம் நான் அந்த டயலாக்கை பேசினேன் இது ரொம்பவே ஒரு கஷ்டமான டயலாக் தான் ஒரு 85 வயது கிழவி, கையில் இருக்கும் குச்சி ஆடிட்டே இருக்கணும், ஒரு ஏழு படிக்கட்டு கீழே இறங்கி வந்து அந்த டயலாக் பேசனும், அப்படி அந்த டயலாக பேசி முடிக்கிறேன் கைதட்டும் சத்தம் கேட்டுச்சு யாருன்னு திரும்பி பார்த்தேன் ரஜினி சார் தான் கைதட்டுனது அந்த இடத்துல சுமார் 2500 பேர் இருந்தாங்க அவ்வளவு பேரும் கைதட்டும் போது ரஜினி சார் வந்து ரொம்ப நல்லா நடிச்சீங்கன்னு பாராட்டினார் அத கேட்டா அப்புறம் விருது எல்லாம் ஒண்ணுமே இல்லன்னு தோணுச்சு. அருணாச்சலம் படம் தான் ரஜினி சார் கூட நடிச்சதுல மறக்க முடியாத ஒரு படம்.


இது போன்ற பல சுவாரசியமான தகவல்களை நடிகை வடிவுக்கரசி அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்கள்.