நடிகர் வடிவேலு, இளையராஜா சந்தித்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement


நாளை மதுரையில் நடக்க இருக்கும் இளையராஜாவின்  ‘இசையென்றால்  இளையராஜா’ இசை நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பங்கேற்க இருக்கிறார். அதன் நிமித்தமாக, நடிகர் வடிவேலு இளையராஜாவை சந்தித்து உள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


 






தமிழ்சினிமாவின் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. பாடல்கள்  இசையமைப்பது மட்டுமல்லாமல், பொதுவெளியிலும் நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அவரால் கொரோனா ஊரடங்கு காரணமாக நிகழ்ச்சிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கொரோனா குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடன் இளையராஜா பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான  முயற்சிகளில் ஈடுபட்டார். 


அதன் படி முதற்கட்டமாக சென்னையிலும், அடுத்ததாக கோவையிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது நாளை மதுரையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். இசைக்கலைஞர்கள், பிரபலங்கள் என பலர் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலும் கலந்து கொள்கிறார்.


 






நீண்ட இடைவேளைக்கு மீண்டும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்கும் வடிவேலு,  மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.