சிறு வயதில் தான் காதல் கடிதம் எழுதி நடந்த சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை இயக்குநர் ஹரீஷ் ஷங்கர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் “உஸ்தாத் பக்த் சிங்”. இந்த படத்தை ஹரீஷ் ஷங்கர் இயக்கியுள்ள நிலையில் ஸ்ரீலீலா மற்றும் ராஷி கன்னா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான பார்த்திபன் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்களும், டீசர் மற்றும் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

சமூக வலைத்தளங்களில் இப்படம் கலவையான விமர்சனத்தை சந்தித்துள்ளது. அதேசமயம் உஸ்தாத் பகத் சிங் படத்தின் இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் பல நேர்காணல்களில் பங்கேற்றார். அதில் ஒரு நேர்காணலில் தன்னுடைய பள்ளி காலத்தில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றை குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement

அதாவது, எனக்கு  சிறுவயதிலிருந்து எப்போதும் எதையாவது எழுதுவது வழக்கமாக இருந்து வந்தது. நான் நன்றாக எழுதுவேன் என என் நண்பர்கள் பாராட்டுவார்கள். அதையே காரணமாக சொல்லி தங்களுக்கு வேண்டிய காதல் கடிதங்களை எழுதி வாங்கி கொள்வார்கள். அந்த கடிதத்தின் உள்ள வார்த்தைகள் எல்லாம் என்னுடையதாக இருக்கும். இறுதியில் தங்கள் பெயரை எழுதி, அதை என்னிடம் பெற்று எனக்கு எதாவது கொடுத்து விட்டு அந்த கடிதத்தை சம்பந்தப்பட்ட பெண்களிடம் கொடுப்பார்கள்.

அப்படியான ஒருமுறை நான் என் நண்பன் ஒருவனுக்கு கடிதம் எழுதினேன். அதன் கடைசியில் மறந்து போய் 'என்றென்றும் அன்புடன்' (Forever Love) என்று என் பெயரை எழுதிவிட்டேன். என்னுடைய நண்பனும் அந்த கடிதத்தை திறந்து கூட பார்க்காமலேயே அதை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கொடுத்துவிட்டான். அதைப் பார்த்ததும், நான் தான் கடிதம் அனுப்பியிருக்கிறேன் என்று  அன்று முதல் அந்தப் பெண் என்னையே பார்க்க ஆரம்பித்தாள்.

அவள் அடிக்கடி என்னைப் பார்த்துச் சிரித்தாள். வெட்கப்பட்டாள். நான் அதை முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  அதன்பிறகு ஒருநாள், அந்தப் பெண் என்னிடம் வந்து, 'ஹரிஷ், எனக்கு உன்னை எப்போதுமே பிடிக்கும். எனினும் காதல் முடிவு என்பது முடிவெடுக்க கடினமாக இருக்கிறது' என கூறினாள். அப்போது தான் கடிதத்தில் நடந்த தவறை நான் உணர்ந்தேன். உடனடியாக என் நண்பனுக்கு தான் உன்னைப் பிடித்திருந்தது. நான் என் பெயரை தவறாக எழுது விட்டேன் என மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து எஸ்கேப்பாகி விட்டேன். இது நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போது நடந்தது என ஹரீஷ் ஷங்கர் கூறியுள்ளார்.