2000-வது ஆண்டுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபலமடைந்தவர் அர்ச்சனா. அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்களை இவர் எடுத்த பேட்டிகள் ரசிகர்களிடையே பரவலான கவனத்தைக் குவித்தது. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள். இளமை புதுமை நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகினார் அர்ச்சனா.
பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா. ஒரு எபிசோடில் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த பாடகர் கார்த்தி, எத்தனை சீசன் வந்தாலும் அர்ச்சனா இல்லமால் ச ரி க ம நிகழ்ச்சி இல்லை என்று பாராட்டி இருந்தார். மேலும், அர்ச்சனாவும் அவரது மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதே போல கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்து இருந்தனர்.
பின்பு 'பிக்பாஸ்' தமிழ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வைல்ட் கார்ட் சுற்றில் போட்டியாளராக உள்ளே நுழைந்தார். இந்த நிகழ்ச்சியில் இவரது விளையாட்டு தொடர்பாக நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் பிக்பாஸ் பார்வையாளர்களால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. பின்பு அவரது யூடியூப் சேனலில் 'பாத்ரூம் டூர்' என்ற வீடியோ ஒன்று வெளியானது. இதுவும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானது. இதற்கான விளக்கங்களை அப்போதே அர்ச்சனா கொடுத்து விட்ட நிலையில் தற்போது அவர் மீதும் அவரது மகள் சாரா மீதும் மீண்டும் எதிர்மறை கருத்துகள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் போது கூட சமூக வலைதளத்தில் நெகட்டிவ் கமன்ட் செய்பவர்களை பற்றி அர்ச்சனா மகள் சாரா சொன்னதை கேட்டு பலரும் எழுந்து நின்று சொன்னதை கேட்டு பலரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். இருப்பினும் இவர்களுக்கு சமூக வலைதளத்தில் ஹேட்டர்ஸ்கள் குறைந்தபாடில்லை. இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா மற்றும் சாரா இருவரும் விஜய் டிவியில் ‘தாயில்லாமல் நான் இல்லை’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களாக வந்ததை பார்த்து ஹேட்டர்ஸ்கள் திட்டி தீர்த்தனர். சாராவும் இணைந்து தொகுத்து வழங்கினார்கள். அந்த நிகழ்ச்சிக்கு பல நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்ததை அடுத்து சாரா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது தொடர்பாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார். முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் 'தாயில்லாமல் நானில்லை' என்ற அம்மா- பிள்ளை தொடர்பான நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை அர்ச்சனாவும் அவரது மகளும் இணைந்து தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். இதற்கான முன்னோட்டக் காணொளி தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கங்களில் வெளியானது.
இதற்குதான் தற்போது அர்ச்சனாவையும் அவரது மகள் மீதும் பிக்பாஸ் மற்றும் யூடியூப் வீடியோ தொடர்பான கருத்துகளை தொடர்பு படுத்தி இதில் பேசி வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்ச்சனாவும் அவரது மகளும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளனர். அந்தப் பதிவில், "நானும் என் அம்மாவும் தொகுப்பாளர்கள் ஆக இருப்பதை பார்த்துவிட்டு பல ஹேட் கமெண்டுகள் வருவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குறிப்பாக என்னை பற்றியும் என்னுடைய அம்மாவைப் பற்றியும் சில பெண்களை அவதூறாக பேசுகிறார்கள்.
நாங்கள் எங்களுடைய வாழ்வில் அன்பை மட்டுமே வரவேற்கிறோம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அதையெல்லாம் உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் உங்களிடமிருந்து அன்பை எதிர்பார்க்கவில்லை. இதுபோல வெறுப்புகளை ஊக்கப்படுத்தவும் நாங்கள் விரும்பவில்லை. எங்களை எப்போதும் போல விரும்புவர்களுக்கு எங்களுடைய அன்பையும் அரவணைப்பையும் கொடுக்கிறோம் உங்கள் ஆதரவுக்கு நன்றி" எனப் பதிவிட்டிருக்கிறார்.
அர்ச்சனா அவருடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவிற்கும் பல நெகட்டிவ் கம்மென்டஸ் வந்தன. பிக்பாஸ் வீட்டிலிருந்து அவர் வெளியே வந்த பிறகும் இது போன்ற நெகட்டிவ் கம்மென்ட்ஸ்களை எதிர் கொண்டார். விஜய் டிவியில் பிக்பாஸிலிருந்து அர்ச்சனா வந்தவுடன் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் அர்ச்சனாவுடன்,சாராவும் நடனம் ஆடியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நெகட்டிவ் கம்மென்ட்ஸ் எந்த அளவிற்கு தன்னை பாதிக்கிறது என்பதை எதார்த்தமாகவும், மற்றவர்களுக்கு புரியும்படியும் பேசியிருப்பார்.
அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவிற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த சாராவின் பதிவின் கீழ் கமென்ட் செய்த வர்ணனையாளர் டிடி அச்சுமாவுக்கும் சாராவுக்கும் வலிமையோடு இருக்க கூறிவிட்டு, இதனையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள் என்று தனது ஆதரவை வழங்கி இருந்தார். அதற்கிய சாரா நன்றி தெரிவித்திருந்தார், அர்ச்சனா "எனக்கு பெரிய பிரச்சனையாக தெரியவில்லை, சாராவுக்குதான் கஷ்டமாக இருக்கும், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் சகிக்கவே முடியாதவை" என்று அர்ச்சனா கூறியிருந்தார். இவர் மட்டுமின்றி ஆர்ஜே அஷ்வினி, நடிகை ஆஷா, வீஜே ஜாக்குளின், ஆகியோரும் கமெண்டுகளில் அவர்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.