கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துக்கு ஃப்ளையிங் கிஸ்ஸுடன் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இணையவாசிகளின் இதயங்களைக் கவர்ந்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுட்டெல்லா. 


நடிகை ஊர்வசி ரவுடெல்லா கடந்த 2013 ஆம் ஆண்டு வரை பாலிவுட்டில் நடித்து வருகிறார். அண்மையில் லெஜண்ட் சரவணா நடித்த லெஜண்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் ஒரே ப்ளஸ் என்று அறியப்பட்டவர் ஊர்வசி.



இந்நிலையில் ஊர்வசி தானும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் காதலிப்பதாக கொளுத்திப் போட்டார். இதனை ரிஷப் பந்த சிக்ஸர் வேகத்தில் மறுத்தார். அது மட்டுமல்ல உடனே ஊர்வசியை தனது சமூக வலைதள பக்கங்களில் ப்ளாக் செய்தார். ஏனெனில் ஊர்வசி ஒரு நேர்காணலில் பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது.


"வாரணாசியில் எனக்கு படப்பிடிப்பு இருந்தது. அதைமுடித்து நான் இரவு தான் ஓட்டலுக்கு திரும்பினேன். அப்போது எனக்கு முன்னரே ஓட்டலுக்கு வந்த ரிஷப் எனக்காக அங்கு காத்திருந்துள்ளார். அது தெரியாமல் நான் ஊருக்கு வந்து தூங்கிவிட்டேன். அவர் என்னை போனில் அழைத்தார். ஒருமுறை இருமுறையல்ல 16 முறை அழைத்துள்ளார். நான் தூங்கிவிட்டதால் அதை கவனிக்கவில்லை. என்னைப் பார்க்க ஒருவர் வந்து பல மணி நேரம் காத்திருந்தும் என்னால் பார்க்க முடியவில்லையே என்ற கவலை எனக்கிருந்தது" என்று கூறினார். இதையும் ரிஷப் பந்த் திட்டவட்டமாக மறுத்தார். 


இந்நிலையில் ரிஷப் பந்த் பிறந்தநாளான இன்று ஊர்வசி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 


ரிஷப் ராஜேந்திர பந்த் என்பவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் புது தில்லி மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார். அக்டோபர் 22, 2015 ஆம் ஆண்டில் 2015-2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டிசம்பர் 23, 2015 ஆம் ஆண்டில் 2015- 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஜய் அசாரே போட்டித் தொடரின் மூலம் பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். டிசம்பர் 2015 ஆம் ஆண்டில் 2016 ஆம் ஆண்டிற்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்தியத் துடுப்பாட்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. பிப்ரவரி 1, 2016 ஆம் ஆண்டில் இந்தத் தொடரில் 18 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் குறைவான பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். 2018 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.பிப்ரவரி 6,2016 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிநிர்வாகம் இவரை 1.9 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. அன்றைய தினம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் நூறு அடித்து இந்திய அணி அரையிறுதிக்குச் செல்ல உதவினார்.